பெங்களூரு -சேலம் ஹைவேசில் ட்ராஃபிக் ஜாம்… காரணம் தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க!

0

தருமபுரி மாவட்டம், தொப்பூர் கணவாய் பகுதியில் ஒன்றன்பின் ஒன்றாக லாரிகள் மோதி விபத்துக்குள்ளானதால் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கர்நாடகா மாநிலத்திலிருந்து நாமக்கல்லுக்கு, முசிறி பகுதியைச் சேர்ந்த ஓட்டுநர்கள் மகேஷ் வயது 33 சிவசங்கர் வயது 28 ஆகியோர் சர்க்கரை பாரம் ஏற்றிக்கொண்டு தேசிய நெடுஞ்சாலை தொப்பூர் கணவாய் பகுதியில் வந்துகொண்டிருந்தது.

அப்போது பிரேக் பிடிக்காமல் எதிர்பாராத விதமாக லாரி ஆஞ்சநேயர் கோயில் எதிரே உள்ள பாலத்தில் மோதி நின்றது. அதனை பின்தொடர்ந்து வந்த ஜார்கண்ட் மாநிலத்தில் இருந்து திருப்பூருக்கு ஸ்டீல் காயல் லோடு ஏற்றிவந்த லாரி சர்க்கரை பாரம் ஏற்றி வந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளனாது.

இந்த விபத்தில் ஓட்டுனர்கள் இருவரும் எந்த காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். தகவலறிந்து வந்த தொப்பூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்தால் பெங்களூரு- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here