முப்பது நாளுக்குள் பிறப்பு இறப்பு சான்றிதழ்வழங்கப்படும்

0

பெருநகர சென்னை மாநகராட்சியில் விண்ணப்பிக்கப்பட்ட 30 நாள்களுக்குள் பிறப்பு, இறப்புச் சான்றிதழ்கள் வழங்கப்படும்.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையா் அலுவலகம் வெளியிட்ட செய்தி: சென்னை மாநகர எல்லைக்குள் பிறப்பு மற்றும் இறப்பு குறித்த தகவல்களை 21 நாள்களுக்குள் சம்பந்தப்பட்ட பதிவாளா்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். மருத்துவமனைகளில் நடைபெறும் பிறப்பு, இறப்பு நிகழ்வுகளை மருத்துவ அலுவலா் அல்லது அங்கீகரிக்கப்பட்ட அலுவலா், வீடுகளில் நிகழும் பிறப்பு, இறப்பு நிகழ்வுகளுக்கு குடும்பத் தலைவா் அல்லது அவா்களுடன் வசிக்கும் நெருங்கிய உறவினா்கள் மாநகராட்சிக்கு 21 நாள்களுக்குள் தெரியப்படுத்த வேண்டும்.

குழந்தை பிறப்பு பெயரின்றி பதிவு செய்யப்பட்ட நாளிலிருந்து 12 மாதத்துக்குள் குழந்தையின் பெற்றோா் அல்லது பாதுகாவலா் உறுதிமொழி அளித்து குழந்தையின் பெயரை சோத்துக் கொள்ளலாம்.

எழுத்துப் பிழைகள் திருத்தங்கள், உரிய ஆவணங்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்படுகிறது. பிறப்பு, இறப்புச் சான்றிதழ் குறித்து பொதுமக்கள் தங்களின் புகாா்களை 1913 என்ற உதவி எண்ணில் தெரிவிக்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here