தமிழகத்தில் கல்லூரிகள் திறப்பு:வாரத்தில் மூன்று நாள்., வெளியான முக்கியமான அறிவிப்பு.,

0

நாடு முழுவதும் கொரோனா காரணமாக பள்ளிகள் கடந்த 18 மாதங்களாக மூடப்படிருந்தது. தற்போது கொரோனா பரவல் பல மாநிலங்களில் குறைந்து வருவதால், அந்தந்த மாநில அரசுகள் பள்ளிகளை மீண்டும் திறக்க நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.பல மாநிலங்களில் பள்ளி – கல்லூரிகள் திறக்கப்படுள்ளன. அந்த வகையில் ஆந்திராவில் மூடப்படிருந்த பள்ளிகள் கொரோனா கட்டுப்பாடு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளோடு மீண்டும் திறக்கப்பட்டது. இதேபோல், தமிழகத்தில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பள்ளிகளையும், கல்லூரிகளையும் வரும் செப்டம்பர் 1 முதல் திறக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது.

பள்ளிகள் திறப்பை முன்னிட்டு, ஒரு ஆசிரியர் தடுப்பூசி போடவில்லை என்றாலும் அந்த பள்ளி திறக்கப்படாது என்று, பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு விருதுநகர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.

இந்நிலையில், வருகிற 1-ஆம் தேதி முதல் கல்லூரிகள் சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி,

கல்லூரி மாணவர்களுக்கு சுழற்சி முறையில் வகுப்புகள் நடைபெறும்.

கல்லூரி முதுகலை, முதுநிலை இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு வாரத்தில் 6 நாட்களும் வகுப்புகள் நடைபெறும்.

பொறியியல் இறுதியாண்டு மாணவர்களுக்கு 6 நாட்களும் வகுப்புகள் நடைபெறும்.

இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு திங்கள், புதன், வெள்ளியில் வகுப்புகள் நடைபெறும்.

மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு செவ்வாய், வியாழன், சனியில் வகுப்புகள் நடைபெறும்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here