தமிழ்நாட்டில் இன்று முதல் புதிய தளர்வால் எதற்கெல்லாம் தெரியுமா..?

0

தமிழகத்தில் மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று முதல் புதிய தளர்வுகள் அமலுக்கு வருகின்றன..

தமிழகத்தில் ஏற்கனவே உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது.. ஏற்கனவே நடைமுறையில்‌ உள்ள கோவிட்‌- 19 நோய்‌ பரவல்‌ தடுப்பிற்கான கட்டுப்பாடுகள்‌ 06.09.2021 வரை மேலும்‌ இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்கப்படுவதாக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.. எனினும் இந்த முறை கூடுதல் தளர்வுகளும் அனுமதிக்கப்படுகின்றன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.. அதன்படி இன்று முதல் புதிய தளர்வுகள் அமலுக்கு வருகின்றன..

புதிய தளர்வுகள் என்னென்ன..?

  • செப்டம்பர் 1 முதல்‌ பள்ளிகளில்‌ 9, 10, 11 மற்றும்‌ 12- ஆம்‌ வகுப்புகள்‌ சுழற்சி முறையில்‌, நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப்‌ பின்பற்றி, செயல்படும்‌.
  • இப்பள்ளிகளில்‌ மதிய உணவுத்‌ திட்டமும்‌ உரிய வழிகாட்டு நெறிமுறைகளைப்‌ பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படும்‌.
  • மேற்படி உயர்‌ வகுப்புகள்‌ செயல்படுவதை கவனித்து அதன்‌ அடிப்படையில்‌, மழலையர்‌ வகுப்புகள்‌, 1 முதல்‌ 8 வரை உள்ள வகுப்புகளை செப்டம்பர் 15-க்கு பிறகு திறப்பது குறித்து ஆலோசனை செய்து அறிவிக்கப்படும்‌.
  • அனைத்து கல்லூரிகளும்‌ 01.09.2021 முதல்‌ சுழற்சி முறையில்‌ வகுப்புகள்‌ நடத்த அனுமதிக்கப்படும்‌. இதற்குரிய வழிகாட்டு நெறிமுறைகளை தொடர்புடைய துறையின்‌ செயலாளர்கள்‌ வழங்குவார்கள்‌.
  • கல்லூரிகளில்‌ பணிபுரியும்‌ ஆசிரியர்கள்‌ மற்றும்‌ ஆசிரியர்‌ அல்லாத பணியாளர்கள்‌ அனைவரும்‌ தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும்‌.
  • அனைத்து பட்டயப்‌ படிப்பு வகுப்புகள்‌ (Diploma Courses, Polytechnic 0016085) சுழற்சி முறையில்‌ நடத்த அனுமதிக்கப்படும்‌.
  • ஆசிரியர்கள்‌ மற்றும்‌ ஆசிரியர்‌ அல்லாத பணியாளர்கள்‌ அனைவரும்‌ தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும்‌.
  • நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப்‌ பின்பற்றி, 50% பார்வையாளர்களுடன்‌ ஆகஸ்ட் 23-ம் தேதி முதல்‌ திரையரங்குகள்‌ இயங்க அனுமதிக்கப்படும்‌.
  • திரையரங்கப்‌ பணியாளர்கள்‌ அனைவருக்கும்‌ தடுப்பூசி போடப்பட்டிருப்பதை அரங்க உரிமையாளர்கள்‌ உறுதிசெய்து கொள்ளவேண்டும்‌.
  • கடற்கரைகளில்‌ பொதுமக்கள்‌ அனுமதிக்கப்படுவர்‌. இப்பகுதிகளில்‌ அமைந்துள்ள கடைகளின்‌ பணியாளர்கள்‌ மற்றும்‌ சிறுவியாபாரிகள்‌ அனைவருக்கும்‌ தடுப்பூசி செலுத்திட மாநகராட்சி/மாவட்ட ஆட்சியர்கள்‌ உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்‌.
  • உயிரியியல்‌ பூங்காக்கள்‌, தாவரவியல்‌ பூங்காக்கள்‌, படகு இல்லங்கள்‌ ஆகியவை நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படும்‌.
  • இதுவரை இரவு 09.00 மணி வரை அனுமதிக்கப்பட்ட அனைத்து கடைகள்‌ மற்றும்‌ செயல்பாடுகளும்‌ 23- 9- 2021- லிருந்து இரவு 10.00 மணி வரை, நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப்‌ பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படும்‌.
  • தகவல்‌ தொழில்நுட்பம்‌ / தகவல்‌ தொழில்நுட்பம்‌ சார்ந்த சேவை நிறுவனங்கள்‌ 100% பணியாளர்களுடன்‌ நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படும்..
  • அங்கன்வாடி மையங்கள்‌ 1.9.2021 முதல்‌ மதிய உணவு வழங்குவதற்காக செயல்பட அனுமதிக்கப்படும்‌. அங்கன்வாடி மைய ஊழியர்கள்‌ தடுப்பூசி செலுத்தியிருப்பது மாவட்ட ஆட்சியர்கள்‌ உறுதி செய்ய வேண்டும்‌.
  • ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களுக்கு பொது பேருந்து போக்குவரத்து, நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப்‌ பின்பற்றி இயக்க அனுமதிக்கப்படும்‌.
  • நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி மழலையர்‌ காப்பகங்கள்‌ செயல்பட அனுமதிக்கப்படும்‌.
  • மழலையர்‌ காப்பகங்களின்‌ பொறுப்பாளர்கள்‌, பணியாளர்கள்‌ அனைவரும்‌ தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும்‌.
  • நீச்சல்‌ குளங்கள்‌ விளையாட்டு பயிற்சிகளுக்காக மட்டும்‌ 50% பயிற்சியாளர்களுடன்‌ செயல்பட அனுமதிக்கப்படும்‌. பயிற்சியாளர்கள்‌ மற்றும்‌ 18 வயதுக்கு மேற்பட்ட பயிற்சி பெறுபவர்கள்‌ தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும்‌.
  • தமிழ்நாடு திறன்‌ மேம்பாட்டுக்‌ கழகம்‌ மற்றும்‌ மகளிர்‌ மேம்பாட்டு கழகம்‌ மூலம்‌ நடத்தப்படும்‌ வேலைவாய்ப்பு பயிற்சி வகுப்புகள்‌ நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படும்‌.
  • தங்கும்‌ விடுதிகள்‌, கேளிக்கை விடுதிகளில்‌ உள்ள மதுக்கூடங்கள்‌ செயல்பட அனுமதிக்கப்படும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here