பொள்ளாச்சியில் 16 வயது சிறுமிக்கு நடைபெற இருந்த திருமணம் தடுத்துநிறுத்தப்பட்டது

0

கோவை

பொள்ளாச்சி அருகே 16 வயது சிறுமிக்கு நடைபெற இருந்த குழந்தை திருமணத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 26 வயது இளைஞருக்கும், திண்டுக்கல்லை சேர்ந்த தண்டபாணி என்பவரது 16 வயது மகளுக்கும் நேற்று திருமணம் நடைபெறுவதாக இருந்தது. இதுகுறித்த தகவல் பொள்ளாச்சி தெற்கு ஒன்றிய சமூக நலத்துறை அதகாரிகளுக்கு தெரிய வந்தது. அதன் பேரில், பொள்ளாச்சி தெற்கு ஒன்றிய சமூக நலத்துறை அதிகாரிகள், கிராம நிர்வாக அலுவலர் மற்றும் கோமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர்.

தொடர்ந்து, இருவரது பெற்றோரிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டதில் 16 வயது சிறுமிக்கு திருமணம் நடைபெற இருந்தது உறுதி செய்யப்பட்டது. இதனை அடுத்து, இருவரது பெற்றோர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள், 18 வயது நிரம்பாத பெண் குழந்தைகளுக்கு திருமணம் செய்வது தண்டனைக்குரிய குற்றம் என்பதை எடுத்துரைத்து திருமணத்தை தடுத்து நிறுத்தினர்.

மேலும், சிறுமிக்கு 18 வயது பூர்த்தியாகாமல் திருமணம் செய்ய மாட்டோம் என்று பெற்றோர்களிடம் கைப்பட எழுத்துப்பூர்வமாக அதிகாரிகள் எழுதி வாங்கி கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here