அடுத்தடுத்து விஷேச நாட்கள் .. பூக்கள் விலை கிடுகிடு உயர்வு !!

0

வரலட்சுமி விரதம் ,ஓணம் பண்டிகை என அடுத்தடுத்து சுப தினங்கள் வருவதால் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்கள் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.

கொரோனா காரணமாக பூக்கள் விலை சற்று குறைந்து இருந்த நிலையில் தற்போது வரலட்சுமி விரதம், ஓணம் பண்டிகை என அடுத்தடுத்து விசேஷ நாட்கள் வரவிருக்கிறது. இதனால் கடந்த சில தினங்களுக்கு முன்பு விற்பனை செய்யப்பட்ட விலையை விட தற்போது மூன்று மடங்கு விலை அதிகரித்துள்ளது. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் ரோஜா விலை 120 ரூபாய்க்கும், சம்பங்கி 300 ரூபாய்க்கும், மல்லி 1200 ரூபாய்க்கும், அரளி 750 ரூபாய்க்கும், முல்லை 200 ரூபாய்க்கும், பன்னீர் ரோஜா 150 ரூபாய்க்கும், சாமந்தி 180 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

குறிப்பாக கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை மலர் சந்தையிலும் பூக்கள் விலை அதிகரித்துள்ளது. கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு மல்லிகைப்பூ ஒரு கிலோ 450 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது ஆயிரத்து 200 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது .அதேபோல் கிலோ 300 ரூபாய்க்கு விற்று வந்த பிச்சிப்பூ தற்போது ஆயிரத்து 500 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அத்துடன் கிரேந்தி பூ கிலோ 100 ரூபாய் ஆகவும் ஆரஞ்சு கிரேந்தி கிலோ 250 ரூபாய்க்கும், செவ்வந்திப் பூ கிலோ 350 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மதுரையை பொருத்தவரை 200 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்த மதுரை மல்லி இன்று 1,200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதே போல் முல்லைப் பூ கிலோ 800 ரூபாய்க்கும், பிச்சிப்பூ 200 ரூபாய்க்கும் , செவ்வந்திப்பூ 150 ரூபாய்க்கும், சம்பங்கிப்பூ 200 ரூபாய்க்கும், பட்ரோஸ் 200 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here