விளக்கேற்றும் பொழுது இதையெல்லாம் கவனத்தில் எடுத்துக் கொள்ளுங்கள்……

0

தீப வழிபாடு:

நம்முடைய நாட்டின் ஆன்மிக கலாச்சாரத்துடன் இரண்டறக் கலந்தது தீப வழிபாடு. நம் வீட்டில் விளக்கேற்றி வழிபட்டால் தெய்வ சக்தி அதிகரிக்கும். தினசரி விளக்கேற்றும் வீட்டில் அன்னை மகாலட்சுமியின் அருள் கிடைக்கும். வீட்டை தூய்மைப்படுத்தி விளக்கேற்ற அந்த மகாலட்சுமியே நம் வீட்டிற்குள் எழுந்தருளுவாள் என்பது ஐதீகம்.

தீபத்தில் மகாலட்சுமி வசிப்பதால், தீபம் ஏற்றியதும் ‘தீபலட்சுமியே நமோ நம” என்று கூறி வணங்குவது அவசியம்.

கடவுளை வழிபட காலையும், மாலையும் இரண்டு வேளைகளில் தீபம் ஏற்றிவைத்து, அதற்கு நமஸ்காரம் செய்தாலே போதும்; தீய சக்திகள் யாவும் விலகி, வீட்டில் லட்சுமி கடாட்சம் கிடைக்கும்.

தீபத்தின் சுடரில் மகாலட்சுமியும், ஒளியில் சரஸ்வதியும், வெப்பத்தில் பார்வதிதேவியும் எழுந்தருளுவதாக ஐதீகம். எனவே, தீபம் ஏற்றி இறைவழிபாடு செய்வதன் மூலம் முப்பெரும் தேவியரின் திருவருளையும் ஒருங்கே பெறலாம்.

குத்துவிளக்கு :

தெய்வீகமான குத்துவிளக்கின் அடிப்பாகத்தில் ஸ்ரீபிரம்மாவும், அதன் நடுப்பகுதியான தண்டு பாகத்தில் ஸ்ரீமகாவிஷ்ணுவும், விளக்கின் மேல் பாகத்தில் ஸ்ரீசிவபெருமானும் உறைவதாக நம்பிக்கை.

குத்துவிளக்கில் அலைமகள், மலைமகள், கலைமகள் ஆகிய முப்பெரும் தேவியரும் இன்னும் சில சக்திகளும் குடிகொண்டு உள்ளார்கள் என்று போற்றப்படுவதால் குத்துவிளக்கு கடவுளின் அம்சமாகவே கருதப்படுகிறது.

தீபம் ஏற்றுவதால் உடல் ஆரோக்கியம், தனச்சேர்க்கை, நல்லபுத்தி ஆகியவை பெருகும் என்பது நம்பிக்கை.

எந்த விளக்கை ஏற்றினால் என்ன பலன்?

மண்ணால் செய்யப்பட்ட விளக்கு ஏற்றினால் பீடை விலகும்.

வெள்ளி விளக்கு ஏற்ற திருமகள் அருள் கிடைக்கும்.

பஞ்சலோக விளக்கு ஏற்ற தேவதை வசியம் உண்டாகும்.

வெண்கல விளக்கு ஏற்ற ஆரோக்கியம் உண்டாகும்.

இரும்பு விளக்கு ஏற்ற சனி கிரக தோஷம் விலகும்.

எந்த எண்ணெயில் தீபம் ஏற்றலாம்?

நெய் தீபம் ஏற்றினால் செல்வ விருத்தி, நினைத்தது கைகூடும்.

நல்லெண்ணெயில் தீபம் ஏற்றினால் ஆரோக்கியம் அதிகரிக்கும்.

தேங்காய் எண்ணெயில் தீபம் ஏற்றினால் வசீகரம் கூடும்.

இலுப்பை எண்ணெயில் தீபம் ஏற்ற காரிய வெற்றி கிடைக்கும்.

விளக்கெண்ணெயில் தீபம் ஏற்ற புகழ் உண்டாகும்.

விளக்கெண்ணெய், இலுப்பை எண்ணெய், நெய், நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆகிய ஐந்து எண்ணெய்களை கலந்து விளக்கேற்ற அம்மன் அருள் கிடைக்கும்.

விளக்கு ஏற்றக்கூடாத எண்ணெய்கள் :

கடலை எண்ணெய், கடுகு எண்ணெய், பாமாயில் போன்றவைகளை கொண்டு ஒருபோதும் விளக்கேற்றவே கூடாது. இது மனக்கவலையையும், தொல்லைகளையும், பாவங்களையுமே அதிகரிக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here