ஆக. 23 முதல் 10ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் அரசு அறிவிப்பு

0

10-ம் வகுப்பு தற்காலிக மதிப்பெண் சான்றிதழை ஆக.23 முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது

இதுகுறித்து அரசுத் தேர்வுகள் இயக்குநர் உஷாராணி இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”பள்ளி மாணவர்களுக்குப் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 2021 தொடர்பான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை 23.08.2021 தேதி அன்று காலை 11.00 மணி முதல் 31.08.2021 தேதி வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மாணவர்களுக்குப் பிறந்த தேதி, தேர்வெண் ஆகியவற்றை அவர்கள் பயின்ற பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிப் படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைப்பேசி எண்களுக்குக் குறுஞ்செய்தி வழியாக அரசுத் தேர்வுத் துறையின் மூலம் 21.08.2021 தேதி அன்று காலை 11.00 மணிக்கு அனுப்பி வைக்கப்படும்.

எனவே, பள்ளி மாணவர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில், தங்களுக்கான ரோல் எண், பிறந்த தேதி ஆகிய விவரங்களைப் பதிவு செய்து, தற்காலிக மதிப்பெண் சான்றிதழைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அனைத்துப் பள்ளிகளும் தற்காலிக மதிப்பெண் சான்றிதழைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here