வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவினை புதுப்பிக்க தவறி விட்டீர்களா..இதோ உங்களுக்கான வாய்ப்பு!!!

0

வேலை வாய்ப்பு அலுவலகத்தில் 2017,2018 மற்றும் 2019ம் ஆண்டுகளில் பதிவினை புதுப்பிக்க தவறியவர்களுக்கு சிறப்பு சலுகை அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள வேலை வாய்ப்பகங்களில் 2017,2018 மற்றும் 2019ம் ஆண்டுகளில்(01.01.2017 முதல் 31.12.2019 ) வரை வேலை வாய்ப்பு அலுவலகங்களில் புதுப்பிக்க தவறியவர்களுக்கு நிபந்தனைகளுடன் சலுகைகள் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, புதுப்பிக்க தவறியவர்கள் இன்று (29.5.2021)முதல் மூன்று மாதத்திற்குள் ஆன்லைன் மூலம் புதுப்பித்துக்கொள்ளலாம் எனவும், இந்த சலுகை ஒரு முறை மட்டுமே வழங்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், மூன்று மாதங்களுக்கு பின் கோரிக்கைகள் நிராகரிக்கப்படுவதோடு, 01.01.2017க்கு முன் புதுப்பிக்க தவறியவர்களின் கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது எனவும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here