“மேகி நூடுல்ஸ் உடலுக்கு கேடு விளைவிக்க கூடிய ஒன்று தான்” ஒப்பு கொண்ட நிறுவனம்!!

0

மேகி நுாடுல்ஸ் உடலுக்கு கேடு விளைவிக்கும் என்பதை, அதை தயாரிக்கும் ‘நெஸ்லே’ நிறுவனம் ஏற்றுக்கொண்டு உள்ளது.

உலகின் மிகப்பெரிய உணவுப்பொருள் நிறுவனமான நெஸ்ட்லே, தரம் குறித்து அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கிக் கொள்வது வழக்கம். ஆனாலும் அந்த நிறுவனத்தின் மேகி நூடுல்ஸூக்கு குழந்தைகள் முதல் பெரியர்கள் வரை அனைத்து தரப்பிலும் ரசிகர்கள் உள்ளனர்.

சில ஆண்டுகளுக்கு முன்பு மேகியில் காரியம் அதிகம் இருப்பதாக சர்ச்சை எழுந்த நிலையில், இந்தியா முழுவதும் மேகிக்கு தடை விதிக்கப்பட்டது. அதன்பிறகு நிறுவனம் தயாரிப்பில் மாற்றம் செய்து அறிக்கை அளித்ததை அடுத்து தடை விலக்கிக்கொள்ளப்பட்டது

இந்நிலையில் அதிர்ச்சி அளிக்கும் தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே, நெஸ்ட்லே தயாரிக்கும் உணவு பொருட்களின் தரம் குறித்த ஆய்வறிக்கையை, அதிகாரிகள் சமீபத்தில் சமர்ப்பித்தனர். அதில், அந்நிறுவனம் தயாரிக்கும் மேகி நுாடுல்ஸ், ஐஸ்கிரீம் உட்பட, 60 சதவீத உணவு பொருட்கள் ஆரோக்கியமானவை அல்ல என கூறப்பட்டுள்ளது.

அந்த அறிக்கை குறித்த தகவல் வெளியாகி, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதுமட்டுமின்றி, தன் தயாரிப்புகளில், ஊட்டச்சத்து மதிப்பை ஆய்வு செய்து வருவதாகவும், உடல்நிலை தொடர்பான விஷயம் என்பதால், அவற்றை ஆரோக்கியம் மற்றும் சுவையுடன் தயார் செய்வதற்கான மாற்றங்கள் மேற்கொள்ளப்படும் என்றும், நெஸ்லே கூறி உள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here