மும்பை இந்தியன்ஸ் அணியிலிருந்து யார்க்கர் ஸ்பெஷலிஸ்ட் லசித் மலிங்கா விடுவிக்கப்பட்டுள்ளார்

0

மும்பை இந்தியன்ஸ் அணியிலிருந்து யார்க்கர் ஸ்பெஷலிஸ்ட் லசித் மலிங்கா விடுவிக்கப்பட்டுள்ளார்.

ஐபிஎல் வரலாற்றில் 5 முறை சாம்பியன் பட்டம் வென்று வெற்றிகரமான அணியாக திகழும் மும்பை இந்தியன்ஸுக்கு பல்வேறு வெற்றிகளைத் தேடித் தந்தவர் லசித் மலிங்கா. அவர் 2021 ஐபிஎல் ஏலத்துக்கு முன்பு அந்த அணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

ஐபிஎல் போட்டியில் இருக்கும் 8 அணிகள் தங்களிடம் தக்கவைத்துக் கொள்ள விரும்பும் வீரர்களின் பட்டியலை ஜனவரி 21-ஆம் தேதிக்குள் வழங்க வேண்டும் என ஐபிஎல் நிர்வாகக் குழு முடிவு செய்திருந்தது. இந்த நிலையில், ஐபிஎல் அணிகள் விடுவிக்கப்பட்ட வீரர்கள் பட்டியலை வெளியிட்டு வருகின்றனர்.

ஜேம்ஸ் பேட்டின்சன், நாதன் கூல்டர் நைல், மிட்செல் மெக்லனான உள்ளிட்ட வேகப்பந்துவீச்சாளர்களும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

மற்றபடி கிறிஸ் லின், குயின்டன் டி காக், கைரன் போலார்ட், பாண்டியா சகோதரர்கள் உள்ளிட்டவர்கள் அணியில் தக்கவைக்கப்பட்டுள்ளனர்.

விடுவிக்கப்பட்டுள்ள வீரர்கள்:

லசித் மலிங்கா, மிட்ச் மெக்லனான், ஜேம்ஸ் பேட்டின்சன், நாதன் கூல்டர் நைல், ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட், பிரின்ஸ் பால்வந்த் ராய், திக்விஜய் தேஷ்முக்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here