மாரடைப்பை தடுக்கும் முதலுதவி!

0

மாரடைப்பு வந்தால் என்ன செய்வது? அவசர முதலுதவி வண்டியா…இல்லை காரில் அழைத்துச் செல்வதா?

ஒருவருக்கு மாரடைப்பு வந்தால் என்ன செய்வது?

அவசர முதலுதவி வண்டியை அழைப்பதா…இல்லை உடனடியாகக் காரில் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதா?
விளம்பரம்

இன்று உலக இதய தினத்தையொட்டி அந்தக் கேள்விக்குப் பதிலைக் கண்டறிந்தது. 

அவசர முதலுதவி வாகனத்தை அழைப்பதால் முன்னதாக சிகிச்சை பெற்று இதயத்திற்கு ஏற்படும் பாதிப்பைக் குறைக்கலாம் என்கிறார் தேசியப் பல்கலைக்கழக இதய நிலையத்தைச் சேர்ந்த மருத்துவர் லோ புவே ஹூவான்

மாரடைப்பின்போது ஒவ்வொரு நொடியும் முக்கியம் என்றார் அவர்.

அவசர முதலுதவிச் சேவைகள் பயன்படுத்தப்படுகின்றனவா?

சிங்கப்பூர்ப் பொது மருத்துவமனையில் மூன்றில் இரு பங்கு மாரடைப்பு நோயாளிகள் தாங்களாகவே மருத்துவமனைக்கு வந்ததாய்த் தெரிவிக்கப்பட்டது.

தேசிய அளவில் சுமார் பாதி மாரடைப்பு நோயாளிகள் அவசர முதலுதவிச் சேவைகளை நாடுவதாய்க் கூறப்பட்டது.

மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் சிகிச்சை

நெஞ்சு வலியுள்ள 300 பேரில் ஒருவர் மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் மாரடைப்பால் பாதிக்கப்படுவதாய்த் தெரிவிக்கப்பட்டது.
அவசர முதலுதவி வண்டியில் செல்வதால் அவர்களுக்கு உடனடி சிகிச்சை வழங்கப்படுகிறது.

நோயாளிக்குச் சிகிச்சை வழங்குவதுடன் அவர்களைப் பரிசோதிப்பதால் மருத்துவமனைக்குச் சென்றவுடனேயே அவர்களின் நிலைமை மருத்துவக் குழுவிற்குத் தெரிவிக்கப்படுகின்றது.

மருத்துவக் குழுவிற்கும் நோயாளி வருவது குறித்த விவரம் முன்னதாகக் கிடைப்பதால் அவர்கள் தயார்நிலையில் இருப்பார்கள் என்றார் டாக்டர் லோ.

விரைவாகச் சென்றால் குறைவான சிகிச்சைக் காலம்

மருத்துவமனை சிகிச்சை ஒரு மணிநேரம் தாமதிக்கப்பட்டால் நோயாளிகள் மடியும் அபாயம் 55 விழுக்காடு அதிகரிப்பதாய்க் கூறினார் டாக்டர் லோ.

அறிகுறிகள் தோன்றிய 3 மணிநேரத்தில் வந்தவர்கள் குறைவான காலத்தில் உடல்நலம் தேறினர் என்று ஆய்வு ஒன்று குறிப்பிட்டது.

60 நிமிடத்திற்குள் இதயக் குழாய் அடைப்புகள் சரிசெய்யப்படும் நோயாளிகளுக்கு மரண அபாயம் 12 விழுக்காடு குறைவதாய்க் கூறினார் அவர். அவசர முதலுதவி வாகனத்தில் வரும் நோயாளிகளுக்கு அடைப்புகள் அந்தக் காலக்கட்டத்திற்குள் சரிசெய்யப்படுவது மூன்று மடங்கு அதிகம் என்றார் டாக்டர் லோ.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here