நகை கடன் தள்ளுபடி..விரைவில் வெளியாக உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

0

கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கு உட்பட்ட நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படுவதற்கான அறிவிப்பை தமிழக அரசு விரைவில் வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் கூட்டுறவு துறையின் கீழ் மாநில தலைமை கூட்டுறவு வங்கி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள், குறைந்த வட்டியில் தங்க நகைகளுக்கு கடன்களை வழங்கி வருகின்றன. அந்த வகையில் 2011 முதல் 2020 டிசம்பர் வரை, 6.60 கோடி பேருக்கு 2.64 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு, நகை கடன் வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கு உட்பட்ட நகை கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்’ என திமுக தனது தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்டிருந்தது..

இந்த சூழலில் தற்போது திமுக ஆட்சி பொறுப்பேற்றுள்ள நிலையில், தனது தேர்தல் வாக்குறுதி ஒவ்வொன்றாக அக்கட்சி நிறைவேற்றி வருகிறது.. அந்த வகையில் நகைக் கடன் தள்ளுபடி குறித்த அறிவிப்பை பட்ஜெட் கூட்டத்தொடரில் திமுக தலைமையிலான அரசு வெளியிட உள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியானது.

இந்நிலையில் நகைக் கடன் தள்ளுபடி குறித்து கூட்டுறவு துறை அமைச்சர் ஐ. பெரியசாமியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.. அதற்கு பதிலளித்த அவர் ” தமிழ்கத்தில் நிச்சயம் நகை கடன் தள்ளுபடி செய்யப்படும்.. கல்யாணமாகி 60 நாட்களில் குழந்தை பிறந்தவிடுமா..? நகை கடன்களை தள்ளுபடி செய்வதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்..” என்று தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here