தமிழ்நாடு லாக்டவுன்: இ பதிவு…சலூன்கள்..போக்குவரத்து..இந்த 10 விஷயங்கள் ரொம்ப முக்கியம் மக்களே!!

0

சென்னை: தமிழகத்தில் 27 மாவட்டங்களில் சலூன்களை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இ பதிவு கட்டுப்பாடுகள் தொடர்பாகவும் புதிய நெறிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் ஜூன் 14 முதல் 21ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது.

கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் நோய்த் தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

இதனால் இங்கு முக்கியமான கட்டுப்பாடுகள் தொடரும். மற்ற மாவட்டங்களில் தளர்வுகள் உள்ளது.

27 மாவட்டம்

27 மாவட்டம்

இதில் 27 மாவட்டங்களில் மக்கள் கவனிக்க வேண்டிய தளர்வுகள் பின்வருமாறு

1. சலூன்கள் (Beauty Parlour, Saloons. Spas) இயங்கும். 50% பேர் அனுமதிக்கப்படடுவார்கள். காலை 6.00 மணி முதல் மாலை 5.00 மணி இயங்கலாம்.

2. அரசு பூங்காவில், விளையாட்டு திடலில் நடைப்பயிற்சி செய்யலாம்.

3. டாஸ்மாக் கடைகள் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும். சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்பட வேண்டும்.

4. செல்பேசி மற்றும் அதனைச் சார்ந்த பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 9.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

5. மிக்ஸி, கிரைண்டர், டி.வி. பிரிட்ஜ் உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் அனுமதிக்கப்படும்.

6. பள்ளி, கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கை தொடர்பான நிருவாகப் பணிகள் அனுமதிக்கப்படும்.

இ பதிவு

7. தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் நான்கு சக்கர வாகனங்களில் பணிக்கு செல்ல ஏற்கனவே அனுமதிக்கப்பட்டிருந்தனர். தற்போது அவர்கள் தங்களது இரு சக்கர வாகனங்களிலும் இ-பதிவு மற்றும் தொழிற்சாலை வழங்கியுள்ள அடையாள அட்டையுடன் பணிக்கு சென்று வர அனுமதிக்கப்படுவர்.

11 மாவட்டங்களில் கட்டுப்பாடுகள் என்ன?

8. கொரோனா அதிகம் உள்ள 11 மாவட்டங்களில் இ பதிவு தொடர்பாக கட்டுப்பாடுக்குள் கண்டிப்புடன் கடைபிடிக்கப்படும். இங்கு தனியார் பாதுகாப்பு சேவை நிறுவனங்கள் மற்றும் அலுவலகம், வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடு பராமரிப்பு உள்ளிட்ட சேவைகள் (Housekeeping) இ-பதிவுடன் அனுமதிக்கப்படும்.

9. மின் பணியாளர் (Electricians), பிளம்பர்கள் (Plumbers), கணினி மற்றும் இயந்திரங்கள் பழுது நீக்குபவர் (Motor Technicians) மற்றும் தச்சர் போன்ற சுயதொழில் பணிகளுக்கு இ-பதிவுடன் தேவை.

10 வாடகை வாகனங்கள், டேக்ஸிகள் மற்றும் ஆட்டோக்களில் பயணிகள் இ-பதிவுடன் செல்ல அனுமதிக்கப்படும். மேலும், வாடகை டேக்ஸிகளில், ஓட்டுநர் தவிர மூன்று பயணிகளும், மூன்று பயணிகளும், ஆட்டோக்களில், ஓட்டுநர் தவிர இரண்டு பயணிகள் மட்டும் பயணிக்க அனுமதிக்கப்படும்.

ஏன்

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் கூடுதல் தளர்வுகள் வந்துள்ளது. மேற்கண்ட 11 மாவட்டங்களில் புதிய கேஸ்கள் குறைந்துவிட்டன. ஆனாலும் ஆக்டிவ் கேஸ்கள் அதிகம் உள்ளன. இதன் காரணமாக இங்கு இன்னும் பெரிய அளவில் தளர்வு அமலுக்கு வரவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here