தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு?..குறி்த்து முக்கிய அறிவிப்பு

0

கொரோனா காரணமாக மூடப்பட்டுள்ள பள்ளிகளால் மாணவர்களின் கல்வித்தரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அதே போல இந்த ஆண்டும் மாணவர்களுக்கு பள்ளிகளில் நேரடி கல்வி என்பது கேள்விக்குறியாகியுள்ளது.

தமிழகம் உட்பட நாடு முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டுள்ள நிலையில், மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் பள்ளிகளில் நேரடி கல்வி என்பது பாதிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் வழியாக பாடங்கள் நடத்தப்பட்டு வந்தாலும், அதில் பல மாணவர்கள் பெரிதும் ஆர்வம் இல்லாதவர்களாகவே காணப்படுகின்றனர். இதனால் மாணவர்களின் மனநலம் பாதிக்கப்படக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது.

இது தவிர மாணவர்களுக்கு நேரடி வகுப்புகளில் கிடைக்கும், மாணவர் ஆசிரியர் சந்திப்பு, விளையாட்டு, யோகா, ஒழுக்கக்கல்வி போன்றவை பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த வாய்ப்புகள் எல்லாம் கொரோனாவால் முற்றிலுமாக பறிக்கப்பட்டு விட்டது. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக பாடங்கள் நடத்தப்பட்டு வருகிற போதிலும், அதன் மூலம் மாணவர்கள் பயனடைந்தார்களா? என்பது சந்தேகம் தான்.

அதே நேரத்தில் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் தவிர மற்ற அனைத்து மாணவர்களும் தேர்வுகள் இல்லாமல் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மே மாதம் 1 ஆம் தேதி முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து புதிய கல்வியாண்டுக்கான பாடத்திட்டங்களை மேற்கொள்ள, மே மாத இறுதியில் ஆசிரியர்கள் பள்ளிக்கு வர வேண்டும் என கூறப்பட்டிருந்தது. ஆனால் தமிழகத்தில் கொரோனா 2 ஆம் பரவல் உயர்ந்து வந்ததால் இந்த செயல்பாடுகள் எல்லாம் தடைபட்டது.

இந்த நிலையில் மாணவர்களின் கோடை விடுமுறை இன்று (மே 31) முடிவுக்கு வருகிறது. தொடர்ந்து நாளை (ஜூன் 1) முதல் புதிய கல்வி ஆண்டு தொடங்கப்பட உள்ளது. அனைத்து மாணவர்களுக்கும் நாளை (ஜூன் 1) முதல் ஆன்லைன் வகுப்புகள் துவங்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில், புதிய கல்வி ஆண்டுகளுக்கான முன்னேற்பாடுகள் இன்னும் முடிவடையவில்லை. மேலும் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு புதிய கல்வி ஆண்டு குறித்த எந்த தகவலையும் பள்ளிக்கல்வி இயக்குனரகம் இதுவரை அனுப்பவில்லை.

அதனால் நாளை (ஜூன் 1 ) முதல் பள்ளி மாணவர்களுக்கு, அடுத்த கல்வியாண்டு துவங்குவதற்கான அறிகுறிகள் எதுவும் தெரியவில்லை. தமிழக பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள் துவங்குவதிலேயே இத்தனை சிக்கல்கள் என்றால், பள்ளிகளில் நேரடி வகுப்புகள் துவங்குவது என்பது சாத்தியமில்லாதது என்ற கேள்வி பெற்றோர்கள், ஆசிரியர்களிடையே எழுந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here