தமிழகத்தில் எங்கெல்லாம் தளர்வு? இன்று வெளியாகிறது முக்கிய அறிவிப்பு.

0

தமிழகத்தில் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து இன்று முக்கிய அறிவிப்பு வெளியாக இருக்கிறது. எங்கெல்லாம் கட்டுப்பாடு நீடிக்கும், எந்த மாவட்டங்களில் எல்லாம் தளர்வு அளிக்கப்படும் என தமிழக அரசு அறிவிக்க உள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் தளர்வுகள் அற்ற ஊரடங்கு அமலில் உள்ளது. மே 10ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் தொற்று பரவல் கட்டுக்குள் வராததையடுத்து, மீண்டும் முழு ஊரடங்கு ஒருவாரம் நீட்டிக்கப்பட்டது. வரும் திங்கள் கிழமை வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு முடிய உள்ளதால், நீட்டிப்பு குறித்து முடிவெடுக்க முதல்வர் மு.க ஸ்டாலின் நேற்று ஆலோசனை நடத்தினார்.

தலைமைச் செயலாளர் இறையன்பு, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், டிஜிபி திரிபாதி உள்ளிட்டோர் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

அக்கூட்டத்தில், தளர்வுகளுடன் ஊரடங்கை நீடிப்பது குறித்தும் பாதிப்பு குறைவாக இருக்கும் மாவட்டங்களில் தளர்வுகள் அளிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. பாதிப்பு அதிகமாக இருக்கும் கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் கடும் கட்டுப்பாடுகள் தொடர வாய்ப்பு இருப்பதாகவும் மேற்கு மாவட்டங்களில் 30% மேல் பாதிப்பு இருப்பதால் அங்கு ஊரடங்கு கடுமையாக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் தொற்று பரவல் குறைந்தாலும், சில மாவட்டங்களில் தொற்று பரவல் குறையவில்லை என மருத்துவ நிபுணர் குழு தெரிவித்துள்ளது. கணிசமாக தொற்று குறைந்துள்ள பகுதிகளில் தளர்வுகளை அறிவிக்கலாம் என நிபுணர் குழு கருத்து தெரிவித்துள்ளது.

அந்த வகையில் சென்னையில் தளர்வுகள் அளிக்க வாய்ப்பு உள்ளது. காய்கறி கடைகள், இறைச்சிக் கடைகள், மளிகைக் கடைகள் குறிப்பட்ட நேரம் வரை திறந்திருக்க அனுமதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே தமிழ்நாட்டில் ஒரு வாரம் ஊரடங்கை நீட்டிக்க மருத்துவ நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து இன்று முக்கிய அறிவிப்பு வெளியாக இருக்கிறது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here