ஜுன் 14 வரை உள்ள ஊரடங்கு விதிகள் மற்றும் தளர்வுகள்..முழு விவரம்!!!

0

சென்னை: தமிழகத்தில் லாக்டவுனில் சில மாவட்டங்களில் தளர்வுகள் அமல்படுத்தப்பட்டாலும் அனைத்து மாவட்டங்களிலும் டாஸ்மாக் மதுபான கடைகள், சலூன்கள் மற்றும் தேநீர் கடைகளை திறக்க அனுமதீக்கப்படவில்லை.

கொரோனா மரணங்களும் லேசாக குறைய தொடங்கி உள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் சில தளர்வுகளுடன் கூடிய லாக்டவுடன் ஜூன் 14-வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

கொரோனா நோய் தொற்றுள்ள 11 மாவட்டங்கள் வகைப்படுத்தப்பட்டு அந்த மாவட்டங்களுக்கான தளர்வுகள், இதர மாவட்டங்களுக்கான தளர்வுகள் என பிரித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று அறிவிப்பு வெளியிட்டார். பலசரக்கு கடைகள், காய்கறி கடைகள், இறைச்சி கடைகள் பொதுவாக காலை 6 மணி முதல் மாலை 5 மணிவரை திறந்திருக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

அதேநேரத்தில் அனைத்து மாவட்டங்களிலும் டாஸ்காம் மதுபான கடைகள், தேநீர் கடைகள் மற்றும் சலூன்கள் திறக்க அனுமதிக்கப்படவில்லை. முதல் லாக்டவுன் அமல்படுத்தப்பட்ட போது தேநீர் கடைகளுக்கு அனுமதிக்கப்பட்டிருந்தது. ஆனால் கூட்டம் அதிகமாக கூடியதா தேநீர் கடைகள் மூடப்பட்டன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here