சென்னை உள்ளிட்ட 27 மாவட்டங்களில் டாஸ்மாக் திறப்பு!

0

தமிழகத்தில் கூடுதல் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள 27 மாவட்டங்களில் வரும் 15-ம் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என, முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் தினசரி கரோனா தொற்று படிப்படியாகக் குறைந்துவருகிறது. இன்றைய (ஜூன் 11) நிலவரப்படி, தமிழகம் முழுவதும் 15,759 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. சென்னையில், 1,094 பேருக்குத் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதனிடையே, வரும் 14-ம் தேதியுடன் அமலில் உள்ள ஊரடங்கு நிறைவடையவுள்ள நிலையில், தமிழகத்தில் மேலும் சில தளர்வுகளுடன் வரும் 14-ம் தேதி முதல் ஜூன் 21-ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை உத்தரவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here