சுங்கசாவடி இல் 100 மீட்டருக்கு மேல் வாகனங்கள் நின்றால் கட்டணம் செலுத்த தேவையில்லை!!!!

0

டெல்லி: நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் 100 மீட்டருக்கு மேல் வாகனங்கள் வரிசையில் நின்றால், அந்த குறிப்பிட்ட வாகனங்கள் அனைத்தும் கட்டணம் செலுத்தாமலேயே செல்லலாம் என இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: நாட்டில் நான்கு சக்கர வாகனங்களுக்கு ஃபாஸ்ட் டேக் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஏறக்குறைய அனைத்து வாகனங்களும் ஃபாஸ்ட் டேக்கை பொருத்தியுள்ளன. இதனால் சுங்கச் சாவடிகளில் காகிதமில்லா பணப்பரிவர்த்தனை உயர்ந்திருக்கிறது. அதேநேரத்தில், சுங்கச் சாவடிகளில் வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருப்பதும் தவிர்க்கப்பட்டிருக்கிறது.

இதனால் பொதுமக்கள் நன்கு பலனடைந்துள்ளனர்.

இந்நிலையில், சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் காத்து நிற்கும் நேரத்தை குறைக்க புதிய வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் அமல்படுத்தப்படவுள்ளன. அதன்படி, சுங்கச் சாவடிகளில் பணம் செலுத்தும் இடத்தில் இருந்து 100 மீட்டர் தொலைவை குறிக்கும் வகையில் மஞ்சள் நிறக் கோடு வரையப்படும். இக்கோட்டினை தாண்டியும் வாகனங்கள் வரிசையில் நின்றால், அந்தக் குறிப்பிட்ட வாகனங்கள் அனைத்தும் கட்டணம் செலுத்தாமலேயே சுங்கச்சாவடிகளை விட்டு வெளியேறலாம். சுங்கச் சாவடிகளில் பணம் செலுத்தும் இடத்தில் 10 விநாடிகளுக்கு மேல் ஒரு வாகனம் நிற்கக் கூடாது என்பதற்காக இந்த புதிய விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. இவற்றை விரைவில் நடைமுறைப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here