காய்ச்சலை கட்டுப்படுத்தும் தேநீர் வகைகள்!!!

0

கொரோனாவில் இருந்து சீக்கிரம் குணமாகணுமா? இந்த ஜூஸ்களை தினமும் குடிங்க போதும்..கொரோனா இரண்டாம் அலையில் ஒவ்வொரு நாளும் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த கொடிய கொரோனாவின் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பாக இருக்க ஒவ்வொருவரும் மாஸ்க்குகளை தவறாமல் அணிவதோடு, தேவையில்லாமல் வெளியே சுற்றுவதைத் தவிர்த்து, சமூக இடைவெளியை தவறாமல் பின்பற்ற வேண்டும். அதோடு உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முயற்சிக்க வேண்டும். அதற்கு பழங்கள் மற்றும் காய்கறிகள் பெரிதும் உதவி புரிகின்றன. இவற்றில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உடல் ஆரோக்கியத்தை சிறப்பாக வைத்துக் கொள்ள உதவுவதோடு, நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகின்றன. எனவே ஒருவர் தினமும் போதுமான பழங்கள் மற்றும் காய்கறிகளை அன்றாடம் தவறாமல் எடுக்க வேண்டும். இதனால் உடலுக்குத் தேவையான வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள், ஆன்டி-ஆக்சிடின்ட்டுகள் மற்றும் கனிமச்சத்துக்கள் கிடைக்கும். கொரோனாவுக்கான புதிய பவுடர் வடிவ தடுப்பு மருந்து.. எப்போது கிடைக்கும்? எப்படி சாப்பிடுவது? விலை என்ன? கோவிட்- 19 செரிமான மண்டலத்தை பாதித்து, திசுக்களை சேதப்படுத்தி, வயிற்றில் அழற்சியை உண்டாக்குகின்றன. நற்பதமான பழங்கள் மற்றும் காய்கறிகள் செரிமான மண்டலத்தால் எளிதில் உறிஞ்சப்பட்டு ஒரு குணப்படுத்தும் மற்றும் இனிமையான விளைவை அளிக்கிறது. அதிலும் ஜூஸ்கள் /பானங்கள் இரத்த நாளங்களால் விரைவில் உறிஞ்சப்படுவதால், உடலுக்கு உடனடி ஆற்றலை வழங்க ஜூஸ்களைக் குடிப்பது சிறந்த வழியாகும். இதனால் இது கொரோனாவில் இருந்து விரைவில் மீள உதவுகிறது. நற்செய்தி.. கொரோனாவை குணப்படுத்தும் க்ளெவிரா மாத்திரை… அதன் விலை எவ்வளவு? எங்கு கிடைக்கும்? காய்கறிகள் மற்றும் பழ ஜூஸ்களை ஒரு நாளைக்கு இரண்டு-மூன்று முறை குடிப்பது, நோயெதிர்ப்பு மண்டலத்தை ஆதரித்து வலுவாக்குவதோடு, உடலினுள் உள்ள அழற்சியையும் குறைக்கிறது. ஆகவே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள், உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஒருசில ஜூஸ்களைக் குடிப்பதால் விரைவில் கொரோனாவில் இருந்து குணமாகலாம். கீழே நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் 6 ஜூஸ்கள் கொடுக்கப்பட்டுள்ளன. தக்காளி புதினா ஜூஸ் தக்காளி புதினா ஜூஸ் ஆன்டி-ஆக்சிடன்ட்டுகள் அதிகம் நிறைந்தது மற்றும் இது செரிமானத்தை சீராக்க உதவுகிறது. இந்த ஜூஸ் தயாரிப்பதற்கு, பிளெண்டரில் 4 தக்காளி உடன் எட்டு-பத்து புதினா இலைகளைப் போட்டு, ஒரு டம்ளர் நீரை ஊற்றி நன்கு அரைத்து, அதில் சிறிது உப்பு, எலுமிச்சை சாறு மற்றும் மிளகுத் தூள் சேர்த்து கலந்தால், ஜூஸ் சுவையாக இருப்பதோடு, ஊட்டச்சத்து நிறைந்ததாகவும் இருக்கும். கேரட், பீட்ரூட், நெல்லி மற்றும் இஞ்சி ஜூஸ் கேரட் மற்றும் பீட்ரூட் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி உடலை சுத்தம் செய்ய உதவுகிறது மற்றும் கல்லீரல் ஆரோக்கியத்தை ஆதரிக்கிறது. நெல்லிக்காயில் வைட்டமின் சி அதிகம் உள்ளதால், இது நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவதில் சிறந்தது. இவற்றைக் கொண்டு ஜூஸ் தயாரிக்க, பிளெண்டரில் 2 கேரட், ஒரு பீட்ரூட், 2 நெல்லிக்காய் மற்றும் ஒரு இன்ச் இஞ்சியை நறுக்கிப் போட்டு, ஒரு டம்ளர் நீர் ஊற்றி நன்கு அரைக்க வேண்டும். பின் அதில் சிறிது எலுமிச்சை சாற்றினை சேர்த்தால், ஜூஸ் தயார். சாத்துக்குடி, அன்னாசி மற்றும் பச்சை ஆப்பிள் ஜூஸ் இந்த ஜூஸ் வைட்டமின் சி மற்றும் கால்சியம் சத்தை அதிகம் உள்ளடக்கியது. இத்தகைய ஜூஸ் நோயெதிர்ப்பு மண்டலத்தின் சக்தியை மேம்படுத்துவதோடு, செரிமானத்தை சிறப்பாகவும் வைத்துக் கொள்ள உதவும். இந்த ஜூஸ் தயாரிப்பதற்கு, பிளெண்டரில் 2 சாத்துக்குடி, 250 கிராம் அன்னாசிப்பழம் மற்றும் ஒரு பச்சை ஆப்பிளை நறுக்கிப் போட்டு, சிறிது கல் உப்பு சேர்த்து அரைத்தால், ஜூஸ் தயார். கிவி, ஸ்ட்ராபெர்ரி மற்றும் ஆரஞ்சு ஜூஸ் இந்த ஜூஸ் ஆன்டி-ஆக்சிடன்ட்டுகள் அதிகம் நிறைந்தது மற்றும் நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவதில் சிறந்தது. அதோடு இது இரத்த அழுத்த அளவைப் பராமரிக்க உதவுகிறது மற்றும் நோய்வாய்ப்படுவதைத் தடுக்கிறது. இந்த ஜூஸ் தயாரிப்பதற்கு, ஒரு கப் ஸ்ட்ராபெர்ரி, 2 தோலுரித்த கிவி மற்றும் ஒரு தோல் நீக்கிய ஆரஞ்சு பழத்தை பிளெண்டரில் போட்டு, அரை கப் நீர் ஊற்றி, ஒரு டீஸ்பூன் தேன் சேர்த்து நன்கு அரைத்தால், ஜூஸ் தயார். மஞ்சள், இஞ்சி, எலுமிச்சை மற்றும் ஆரஞ்சு இந்த பொருட்கள் அனைத்திலுமே அழற்சி எதிர்ப்பு பண்புகளுடன், ஆன்டி-வைரல் மற்றும் ஆன்டி-பாக்டீரியல் பண்புகளும் உள்ளன. இந்த பொருட்களைக் கொண்டு ஜூஸ் தயாரிப்பதற்கு, பிளெண்டரில் ஒரு தோலுரித்த ஆரஞ்சு, ஒரு எலுமிச்சை சாறு, ஒரு துண்டு இஞ்சி மற்றும் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து நன்கு அரைத்து வடிகட்டி, சுவைக்கேற்ப தேன் சேர்த்தால், ஜூஸ் தயார். கொரோனா காலத்தில் குழந்தைகளின் மன ஆரோக்கியத்தைப் பராமாிக்க சில டிப்ஸ்! கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கு முன்னும் பின்னும் நீங்க சாப்பிட வேண்டிய உணவுகள் என்ன தெரியுமா? 2DG : கொரோனாவுக்கான புதிய பவுடர் வடிவ தடுப்பு மருந்து.. எப்போது கிடைக்கும்? எப்படி சாப்பிடுவது? விலை என்ன? கொரோனா வைரஸின் தவிர்க்கக்கூடாத புதிய அறிகுறி… இந்த அறிகுறி இருந்தா உடனடியா ஹாஸ்பிடல் போங்க…! குழந்தைகளை குறி வைக்கும் கொரோனா மூன்றாம் அலை: குழந்தைகளை தாக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? கொரோனாவிலிருந்து உங்கள விரைவாக மீட்க உதவும் உடற்பயிற்சி என்னென்ன தெரியுமா? நற்செய்தி.. கொரோனாவை குணப்படுத்தும் க்ளெவிரா மாத்திரை… அதன் விலை எவ்வளவு? எங்கு கிடைக்கும்? கொரோனா தடுப்பூசி போடப்போறீங்களா? அப்ப இதெல்லாம் பண்றாங்களான்னு பாருங்க… குழந்தைக்கு கொரோனா பாசிட்டிவ் வந்தால் என்ன செய்றது-ன்னு தெரியாம தவிக்கிறீங்களா? இத படிங்க… கோவிஷீல்டு Vs கோவாக்சின் Vs ஸ்புட்னிக் வி தடுப்பூசிகளில் எது குறைவான பக்க விளைவுகளை கொண்டது தெரியுமா? உங்க உடலின் ஆக்சிஜன் அளவை பராமரிக்க உதவும் இரத்த ஓட்டத்தை இந்த உணவுகள் மூலம் அதிகரிக்கலாம் தெரியுமா? சர்க்கரை நோயாளிகளுக்கு கொரோனாவால் இந்த மோசமான ஆபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளதாம்… உஷாரா இருங்க…! வெள்ளரிக்காய், பசலைக்கீரை, செலரி, இஞ்சி மற்றும் எலுமிச்சை ஜூஸ் ஒருவர் வெள்ளரிக்காய், பசலைக்கீரை, செலரி, இஞ்சி மற்றும் எலுமிச்சை ஆகியவற்றை அன்றாட உணவில் சேர்த்து வந்தாலே, ஒட்டுமொத்த ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும். ஏனெனில் இவை உடலினுள் உள்ள அழற்சியைக் குறைக்கவும், செரிமானத்தை மேம்படுத்தவும் உதவுகின்றன. இந்த பொருட்களைக் கொண்டு ஜூஸ் தயாரிப்பதற்கு, 2 தோலுரித்த வெள்ளரிக்காய், 100 கிராம் பசலைக்கீரை, 4 செலரி துண்டுகள், 1 இன்ச் இஞ்சி ஆகியவற்றை பிளெண்டரில் போட்டு அரைத்து, அத்துடன் எலுமிச்சை சாற்றினை சேர்த்தால், ஜூஸ் தயார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here