காதலிப்பது போல் நடித்து கொடூரம்… 21 பெண்களிடம் உல்லாசமாக இருந்துவிட்டு கொலை செய்து நகை, பணம் பறிப்பு : சீரியல் கில்லர் கைது

0

திருமலை:தெலங்கானா மாநிலம், ஐதராபாத் வாராங்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராமுலு(45), மார்பல் தொழிற்சாலையில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவருக்கு சிறுவயதிலேயே திருமணமாகியுள்ளது. ஆனால் சில நாட்களிலேயே குடும்ப தகராறு காரணமாக மனைவி பிரிந்து சென்றுவிட்டாராம். இதனால் ராமுலு தனியாக வசித்து வருகிறார்.இந்நிலையில் அப்பகுதியில் 2 பெண்கள் மாயமானதாக போலீசாருக்கு புகார்கள் வந்தது. இதில் ராமுலுக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரை கைது செய்து விசாரித்தனர். விசாரணையில் பல்வேறு..திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன் விவரம் குறித்து போலீசார் கூறியதாவது:

டிப்டாப்பாக இருக்கும் ராமுலு இளம்பெண்களை காதலிப்பது போல் நடிப்பார். தனது காதல் வலையில் விழும் இளம்பெண்களிடம் உல்லாசமாக இருப்பாராம். பின்னர் திருமணம் செய்வதாக கூறி அவர்களிடம் இருக்கும் நகை, பணத்தை வாங்கிக்கொள்வாராம். அதன்பிறகு அந்த பெண்கள் தங்களை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டால், சரியாக பதில் சொல்லாமல் அலைக்கழிப்பாராம். தொடர்ந்து டார்ச்சர் செய்தால் மறைவான இடத்திற்கு அழைத்து சென்று அங்கு உல்லாசமாக இருந்துவிட்டு அவர்களை கொலை செய்துவிட்டு அவர்கள் அணிந்திருக்கும் நகைகளையும் பறித்துக்கொள்வார். பின்னர் சடலத்தை எரித்தும், புதைத்தும் விடுவாரம்..

இவ்வாறு 19க்கும் மேற்பட்ட பெண்களிடம் பழகி பணம் மற்றும் நகைகளை பறித்துக்கொண்டு கொலை செய்துள்ளார். இந்த வழக்குகளில் கைதான ராமுல் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் இருந்தார். சில மாதங்களுக்கு முன் வழக்கு விசாரணைக்காக போலீசார் கோர்ட்டுக்கு அழைத்து சென்றபோது, போலீசாருக்கு டிமிக்கு கொடுத்துவிட்டு தலைமறைவாகி விட்டார்.தலைமறைவான ராமுலு மேலும் 2இளம்பெண்களை கடத்தி நகை, பணத்தை பறித்துக்கொண்டு அவர்களையும் கொலை செய்துள்ளார். இந்த இளம்பெண்கள் மாயமான வழக்கில் நேற்றுமுன்தினம் இவர் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடந்து வருவதாக ஐதராபாத் காவல் ஆணையர் அஞ்சனிகுமார் நேற்று கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here