கண்கள் புத்துணர்ச்சி பெற!

0

கண்களின் கீழ் கருவளையம் வருவதற்கு காரணம் தூக்கம் இன்மை, ஒழுங்காக சாப்பிடாமல் இருப்பது. தண்ணீர் அதிகமாக குடிக்காமல் இருப்பதாலும், அதிகமாக டி.வி. பார்ப்பது, இவை எல்லாம் காரணம் ஆகிறது. கருவளையம் வராமல் தடுக்க, குறைந்தது 8 மணி நேரம் ஆழ்ந்த நித்திரை இருக்க வேண்டும். தூங்கும் போது எந்த விதமான மன உளைச்சல்களும் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
படுப்பதற்கு முன் சூடான பாலில் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் நல்ல தூக்கம் வரும். மனதையும், உடலையும் டென்ஷன் ஆக வைத்துக் கொள்ளாமல் ரிலாக்சாக இருப்பதும், நல்ல தூக்கத்திற்கு வழி செய்யும். மலச்சிக்கல் வராமல் தடுக்க வெந்நீரில் தேன், எலுமிச்சை கலந்த வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். அல்லது காலையில் வெறும் வயிற்றில் 3 டம்ளர் தண்ணீர் குடிப்பது நல்லது.

இரவில் படுக்க போகும் முன்பு ஒரு துண்டு பப்பாளி சாப்பிட்டு படுத்தாலும் மலச்சிக்கலை தடுக்கலாம். சாப்பிடும் உணவில் அதிகமாக காய்கறி, கீரை வகைகளை அதிகமாக சேர்த்துக் கொள்ள வேண்டும். அதிலும் குறிப்பாக அதிக நார்சத்து உள்ள காய்கறிகளை சேர்த்துக் கொள்வது நல்லது. வெள்ளரிகாய், உருளைகிழக்கு, தக்காளி ஆகியவற்றை மெலிதாக கட் செய்து கண்களுக்கு மேல் வைக்கவும், இதனால் கண்களுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here