ஒமேகா-3 சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா?

0

ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ சத்தான ஊட்டச்சத்து மிக்க உணவுகளை சாப்பிடுவது மிக அவசியம். நாம் தினமும் எடுத்துக்கொள்ளும் பழங்கள் மற்றும் காய்கறிகளில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருந்தாலும், சில குறிப்பிட்ட ஊட்டச்சத்துக்களை தினமும் எடுத்துக்கொள்வதில் தவறவிடுகிறோம்.

அதில் ஒன்று ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள். இந்த வகை அமிலங்கள் நிறைந்த உணவுகளை தினசரி எடுத்துக்கொள்வதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து விரிவாக காண்போம்.

ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் என்றால் என்ன? அவை எவ்வளவு முக்கியம்?

ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் ஒரு முக்கிய ஊட்டச்சத்து ஆகும். இது நல்ல உடல் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது. ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள், உணவுகள் மூலமாகவோ அல்லது சப்ளிமெண்ட்ஸ் மூலமாகவோ நம் உடலுக்கு கிடைக்கிறது. ஒமேகா -3 சத்தினை உங்கள் உணவில் சேர்த்தால், உங்களது வழக்கமான வேலைகளில் மிகச்சிறப்பாகவும் உற்சாகமாகவும் ஈடுபட முடியும். மேலும் இது உடலை நன்றாக இயங்க வைக்கிறது. இதயத்திலிருந்து இனப்பெருக்க அமைப்பு வரை, இது கிட்டத்தட்ட அனைத்து முக்கிய உறுப்புகளுக்கும் பல நன்மைகளை தருகிறது.

இது நம் உடலில் உள்ள பல உயிரணு கட்டமைப்புகளின் அமைப்பையும் உருவாக்குகிறது. ​​ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் பல வகைகள் உள்ளன. இவற்றில், சில வகையான உணவுகளில் காணப்படும் EPA மற்றும் DHA ஆகியவை மிகவும் உதவிகரமானவையாகக் கருதப்படுகின்றன. இவற்றை சரியாகப் பயன்படுத்தினால், உங்கள் ஆரோக்கியம் பல வருடங்களுக்கு மேம்படும். இதில் DHA இயற்கையாகவே விழித்திரை, மூளை மற்றும் விந்தணுக்களில் காணப்படுகிறது. அதனால் தான் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் கண்களுக்கும், மூளைக்கு நல்லது என்று சொல்வார்கள்.

ஒமேகா -3 கொழுப்பு அமிலங்களின் ஆரோக்கிய நன்மைகள் என்ன?

ஒவ்வொரு நபரும் தினமும் 250 முதல் 300 மிகி (EPA+ DHA இணைந்த) ஒமேகா -3 ஃபேட்டி ஆசிட் மூலங்கள் சாப்பிடுவதை வழக்கமாக்கி கொள்ள வேண்டும் என வல்லுநர்கள் பரிந்துரைத்துள்ளனர். சில உடல்நலக் கோளாறுகளால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் தேவைகளுக்கு ஏற்ப அதிக அளவு ஒமேகா -3 மருந்துகளைத் தேர்வு செய்ய அறிவுறுத்தப்படலாம் எனவும் கூறப்படுகிறது.

ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் ஒருவரின் அடிப்படை செயல்பாடுகளுக்கு உதவுகின்றன மற்றும் செல்லுலார் செயல்பாட்டைத் தக்கவைத்து அதை பராமரிக்க இந்த அமிலங்களின் முக்கியமான நிலைகள் உடலுக்கு தேவைப்படுகின்றன. எனவே ஒமேகா-3 அமிலங்கள் ஒரு நல்ல ஆரோக்கியமான வாழ்க்கைக்கு அமுதமாக கருதப்படுகிறது. ஏனெனில் அவை நிறைய ஈர்க்கக்கூடிய ஆரோக்கிய நன்மைகளை வழங்குகின்றன. அந்த நன்மைகள் குறித்து விரிவாக காண்போம்.

* முடக்கு வாத (RA) பிரச்சனையை தடுக்க உதவும்:

ஒமேகா -3 கொழுப்பு அமிலங்களின் ஆரோக்கியமான நன்மை என்னவென்றால் நோயெதிர்ப்பு மண்டலம் அதன் வேலையைச் செய்ய இது உதவுகிறது. முடக்கு வாதம் போன்ற தன்னுடல் தாக்க நிலைமைகளைத் தடுக்கிறது மற்றும் நிர்வகிக்கிறது. ஒமேகா-3 அழற்சி எதிர்ப்பு மருந்துகளின் செயல்திறனை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், மீன் எண்ணெய் போன்ற சில சப்ளிமெண்ட்ஸ் மூட்டு வலி மற்றும் வீக்கத்தையும் குறைக்க உதவுகின்றன.

* உடலில் ட்ரைகிளிசரைடு அளவுகளைக் குறைக்கிறது:

மீன் எண்ணெய் போன்ற சில ஒமேகா -3 நிறைந்த சம்ப்ளிமெண்ட்டுகள் உடலில் உள்ள ட்ரைகிளிசரைடு அளவை அதாவது, இரத்தக் கொழுப்பின் அளவைக் குறைப்பதில் நம்ப முடியாத அளவிற்கு உதவி புரிகிறது. இதனால் இதய ஆரோக்கியம் மேம்படும் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ட்ரைகிளிசரைடுகள் உங்கள் இதயத்திற்கு மோசமானவை மட்டுமல்ல, ஒமேகா -3 நிறைந்த உணவுகள் மற்றும் சப்ளிமெண்ட்ஸ் உங்கள் இதயத்தை ஆரோக்கியமானதாக மாற்றும்.

* மனநோய்களின் அபாயத்தை குறைக்கிறது:

ஒமேகா -3 மூளையை சுறுசுறுப்பாகவும், உச்ச நிலையிலும் வைத்திருக்க நம்பமுடியாத அளவிற்கு நன்மைகளை வழங்குகிறது. மூளையின் ஆரோக்கியத்திற்கும், துணை செயல்பாடுகளுக்கு உதவுவதை தவிர, ஒமேகா -3 உட்கொள்வது மன அழுத்தத்தின் அளவைக் குறைத்து, பல வகையான மனநோய்களின் அபாயத்தைக் குறைப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இதனை உறுதிப்படுத்த மேலும் சில ஆய்வுகள் தேவைப்படுவதாக வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

* உடற்பயிற்சிக்கு தேவையான ஆற்றல்:

மீன் எண்ணெய் மற்றும் வேறு சில ஒமேகா -3 நிறைந்த உணவுகள் அதிக நேரம் உடற்பயிற்சி செய்வதற்கான ஆற்றலை வழங்குகிறது.
எனவே இவற்றை தினமும் சாப்பிடுவது நல்லது.

* கர்ப்பிணிகளுக்கு உகந்தது:

உங்கள் குழந்தை ஆரோக்கியமாகவும் வலிமையாகவும் பிறக்க வேண்டும் என்று நினைத்தால், ஒமேகா -3 நிறைந்த ஒவ்வொரு உணவையும் உங்கள் உணவில் சேர்ப்பது முக்கியம். எளிமையாகச் சொன்னால், ஒமேகா -3 கர்ப்பம் தரித்த ஆரம்ப காலத்தில் இருந்து குழந்தையின் வளர்ச்சியை ஊக்குவிக்க உதவு புரியும். இதனை எடுத்துக்கொள்வதால் குழந்தையின் பார்வை மற்றும் நரம்பியல் வளர்ச்சிக்கு நன்மை பயக்கும். எனவே,கர்ப்பிணிகள் ஒமேகா-3 அமிலங்களை எடுத்துக்கொள்வதில் கவனம் செலுத்த வேண்டும்.

* உடலில் வீக்கத்தின் அளவைக் குறைக்கிறது:

அதிக அளவு வீக்கம் நாள்பட்ட நோய்கள் மற்றும் வாழ்க்கை முறை கோளாறுகளின் அபாயத்துடன் பிணைக்கப்பட்டுள்ளது. அதுவே உங்கள் உணவில் ஒமேகா -3 உணவுகளை குறிப்பிட்ட அளவுகளில் எடுத்துக்கொண்டால், அவை ஆஸ்துமா மற்றும் பிற சுவாச நோய்கள் போன்ற சில நோய்களுடன் தொடர்புடைய அழற்சியின் அளவைக் குறைக்கும் என்று ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

ஒமேகா -3 கொழுப்பு அமிலங்களின் சிறந்த ஆதாரங்கள் யாவை?

ஒமேகா -3 கொழுப்பு அமிலங்களை மருந்துகள் மூலம் சேர்த்துக்கொள்வது ஒரு பொதுவான தேர்வாக இருந்தாலும், நிறைய இயற்கை உணவுகள் மற்றும் சில வகையான கடல் உணவு மற்றும் கோழிகள் ஒமேகா-3 ஊட்டச்சத்து நிறைந்த ஆதாரங்களாகக் கருதப்படுகின்றன.

அதிலும், கொழுப்புள்ள மீன், சால்மன் போன்ற கடல் உணவுகள் , முட்டை, சில வகையான நட்ஸ் மற்றும் சீட்ஸ், நட் எண்ணெய்கள், சில காய்கறிகளில் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளது. இருப்பினும், இந்த உணவுகள் நிறைய கலோரிகளை கொண்டிருக்கும் என்பதால் எடையை அதிகரிக்கச் செய்யும். எனவே தினசரி குறிப்பிட்ட அளவுகளில் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here