ஆசிரியர்கள் தேசிய விருதுக்கு விண்ணப்பிக்கலாம்! மத்திய கல்வி அமைச்சகம் அறிவிப்பு!

0

டெல்லி: நாடு முழுவதும் உள்ள ஆசிரியர்கள் தேசிய விருது பெற விண்ணப்பிக்கலாம் எ ன மத்திய கல்வி அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதன்படி, தேசிய நல்லாசிரியர் விருது பெற ஆசிரியர்கள் விண்ணப்பிக்கலாம் என்று மத்திய கல்வி அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மத்தியஅரசு தரப்பில் இருந்து முன்னாள் குடியரசுத்தலைவரான மறைந்த ஆசிரியர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனைப் போற்றும் வகையில், தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டு வருகறது. இந்த விருதானது, அவரது பிறந்த நாளான செப்டம்பர் 5 ஆம் தேதியான, ஆசிரியர் தினத்தன்று வழங்கப்படுகிறது.

இந்த விருதுக்கு தகுதியான ஆசிரியர்களிடம்த இருந்து, விண்ணப்பங்கள் பெறப்பட்டு, அதை ஆய்வு செய்து, தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது.

இந்தநிலையில், நடப்பாண்டு தேசிய நல்லாசிரியர் விருதுக்கு ஆசிரியர்கள் ஜூன் 1ந்தேதி முதல் ஜூன் 20 ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று மத்திய கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது.

அதன்படி,ஆசிரியர்கள் https://nationalawardstoteachers.education.gov.in/ என்ற இணைய தளத்தில் விண்ணப்பிக்கலாம் என்ற அறிவிப்பும் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here