இந்தியாவிலேயே முதல் மாநிலமாக கர்நாடகாவில் தேசிய கல்விக் கொள்கை அமல்-தொடங்கி வைத்த அமைச்சர் தர்மேந்திர பிரதான்

0

இந்தியாவிலேயே முதல் மாநிலமாக கர்நாடகாவில் நடப்பு ஆண்டில் தேசிய கல்வி கொள்கை அமல்படுத்தப்பட்டுள்ளது.

பெங்களூருவில் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்தும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.இதில்,மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் காணொலி வாயிலாகவும்,கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, கர்நாடக உயர் கல்வித் துறை அமைச்சர் அஷ்வத் நாராயண், தேசிய கல்வி கொள்கையை அமல்படுத்துவதற்கான நிபுணர் குழுவை சேர்ந்த நிபுணர்கள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

அதன்பின்னர்,இந்தியாவிலேயே முதல் மாநிலமாக கர்நாடகாவில் நடப்பு கல்வி ஆண்டில் தேசிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்பட்டுள்ளது.இந்த தேசிய கல்விக் கொள்கை திட்டம் உட்பட பல்வேறு திட்டங்களை மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் நேற்று காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து,பேசிய அமைச்சர் தர்மேந்திர பிரதான்:”நாட்டில் முதல் மாநிலமாக தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்தியதற்காக கர்நாடக முதல் அமைச்சர் பசவராஜ் பொம்மை, கல்வியமைச்சர் அஸ்வந்த் நாராயண் ஆகியோரை பாராட்டுகிறேன். இந்த வரலாற்று சிறப்புமிக்க முடிவால் நாட்டில் பிற மாநிலங்களுக்கு கர்நாடக முன்மாதிரியாக விளங்குகிறது.

தேசிய கல்வி கொள்கையின் காரணமாக அறிவு தளத்தில் கர்நாடகா மிக வேகமாக முன்னேறும் என்று உறுதியாக நம்புகிறேன். கர்நாடகாவின் கல்வித் துறையில் ஏற்படும் மாற்றங்களைப் பார்த்து பிற மாநிலங்களும் விரைவில் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்தும்”, என்று தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here