நீண்ட நாட்களுக்கு பிறகு கடற்கரைக்கு வந்த பொதுமக்கள்

0

இன்று முதல் கடற்கரைக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், சென்னை மெரினா கடற்கரைக்கு பொதுமக்கள் மகிழ்ச்சி பொங்க குடும்பத்தினருடன் வந்து செல்கின்றனர்

கொரோனா பாதிப்பின் இரண்டாம் அலை காரணமாக, நாடு முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அந்த வகையில், கடற்கரைகளில் பொதுமக்கள் அதிகமாக கூடுவதால் நோய் தொற்று அதிகரிக்கும் என்பதால், நோய் பரவலைத் தடுக்கும் விதமாக கடற்கரைகளுக்கு பொதுமக்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.

தொற்று பாதிப்பு படிப்படியாக குறைந்து வரும் நிலையில், கடந்த சில மாதங்களாக கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகின்றன. அதன்படி, சென்னை மெரினா கடற்கரையில், கடந்த 2 மாதங்களுக்கு முன்பிருந்து, சர்வீஸ் சாலையில் சமூக இடைவெளி, முகக் கவசத்துடன் நடைபயிற்சி செல்ல அனுமதிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று காலை 6 மணி முதல் பொதுமக்கள் கடற்கரைகளுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்காக நேற்றே கடற்கரைகள் சுத்தம் செய்யும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர். கடற்கரையில் உள்ள பொதுக்கழிவறைகள் தூய்மைப்படுத்தப்பட்டு, தண்ணீர் வசதி ஏற்படுத்தப்பட்டது.

இன்று மெரினா உள்ளிட்ட கடற்கரைகளில் அனுமதிக்கப்பட்டாலும், மக்கள் முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது உள்ளிட்ட நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் எனவும் அதேபோல, கடற்கரையில் உள்ள கடை வைத்திருக்கும் வியாபாரிகள் தடுப்பூசி போடுவதற்கு மாநகராட்சி ஊழியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசு தெரிவித்துள்ளது. மேலும், காவல்துறையினர் ஒலிப்பெருக்கி மூலம் தனிமனித இடைவெளி முகக்கவசம் அணிதல் உள்ளிட்டவை பற்றி அறிவித்து வருகின்றர்.

இன்று காலை முதல், மெரினா கடற்கரை

மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. அங்குள்ள மணல் பரப்பில் உடபயிற்சி செய்வது, நடைபயிற்சி மேற்கொள்ளுதல் என மக்கள் மகிழ்ச்சியாக காட்சியளிக்கின்றனர். மேலும், நீண்ட இடைவெளிக்கு பின்னர், கடற்கரைக்கு குடும்பத்தோடும் நண்பர்களோடு மக்கள் வரத்தொடங்கியுள்ளனர்.

: தமிழகத்தில் இருந்து 4 மாதங்களுக்கு பின் கர்நாடகா, ஆந்திராவிற்கு பேருந்து போக்குவரத்து தொடக்கம்

சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதால், கடற்கரைக்கு வருகை தரும் மக்கள் கூடுதல் உற்சாகத்துடன் காணப்படுகின்றனர். இதேபோல, ஆங்காங்க பொதுமக்கள் கடற்கரைக்குச் சென்று கடல் அலையைப் பார்த்து ரசித்தும், கடற்கரை மணலில் விளையாடியும் வருகின்றன

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here