செப்டம்பர் 12 நடைபெறும் நீட் தேர்வை தமிழில் எழுத 19 867 பேர் விண்ணப்பம்

0

இந்தியா முழுவதும் எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி உட்பட இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேர நீட் தேர்வு எழுதுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு வருடமும் மே முதல் வாரத்தில் தேசியத் தேர்வுகள் முகமை சார்பில் நீட்தேர்வுகள் நடத்தப்படுவது வழக்கம். நடப்பாண்டில் கொரோனா பரவல் காரணமாக ஆகஸ்ட் 1ம் தேதி நடத்தப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு தற்போது செப்டம்பர் 12ம் தேதிநடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதற்கான விண்ணப்பப் பதிவு ஜூலை 13 மாலை முதல் ஆகஸ்ட் 14 மதியம் 2மணி வரை என அறிவிக்கப் பட்டிருந்தது. https://ntaneet.nic.in/ என்ற இணையதளம் மூலம் மாணவர்கள் விண்ணப்பித்து வந்த நிலையில் ஏற்கெனவே விண்ணப்பித்த மாணவர்கள் கட்டணத்தைச் செலுத்தக் கால அவகாசம் இன்று ஆகஸ்ட் 15 இரவு 11.50 வரை நீட்டிக்கப்பட்டது.

நாடு முழுவதும் 16 லட்சத்து 14 ஆயிரத்து 714 பேர் விண்ணப்பித்துள்ளார்கள். இதில் தமிழகத்தில் இருந்து மட்டும் 1 லட்சத்து 12 ஆயிரத்து 890 பேர் விண்ணப்பித்துள்ளார்கள். இது கடந்த ஆண்டைவிட சுமார் 10 ஆயிரம் பேர் குறைவு.

இதில் தமிழில் தேர்வு எழுத விருப்பம் தெரிவித்து 19,867 பேர் விண்ணப்பித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (யுஜி) – 2021 நாடு முழுவதும் மற்றும் வெளிநாடுகளில் 202 நகரங்களில் அமைந்துள்ள வெவ்வேறு மையங்களில் செப்டம்பர் 12 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மதியம் 02:00 முதல் 05:00 மாலை மணி வரை பேனா மற்றும் காகித முறையில் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நீட் (UG)-2021 க்கான தேர்வு நகர அறிவிப்புச் சீட்டை பதிவிறக்கம்/சரிபார்ப்பதில் மாணவர்களுக்கு ஏதேனும் சிக்கலை எதிர்கொண்டால், https://neet.nta.nic.in/ என்ற இணையதளத்தில் இருந்து ‘OMR விடைத்தாளை எவ்வாறு நிரப்புவது’ என்ற அறிவுறுத்தல்களுடன், 011-40759000 அல்லது மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளலாம் neet@nta.ac.in தொடர்பு கொள்ளாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here