தேசிய கல்வி உதவித்தொகைக்கான அறிவியல் விழிப்புணர்வுதிறனறிவு தேர்வுக்கு அக்டோபர் 30 க்குள் விண்ணப்பிக்கலாம்

0

பள்ளி மாணவர்களின் கல்வி உதவித்தொகைக்கான தேசிய அறிவியல் விழிப்புணர்வு திறனறித் தேர்வு எழுத ஆன்லைனில் அக்.30-க்குள் விண்ணப்பிக்கலாம்.

மத்திய அரசின் விஞ்ஞான் பிரச்சார் நிறுவனம் மற்றும் என்சிஇஆர்டி சார்பில் தேசிய அறிவியல் விழிப்புணர்வு திறனறித் தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.

பள்ளி மாணவர்களிடம் அறிவியல் ஆர்வம் மற்றும் ஆய்வு மனப்பான்மையை உருவாக்கும் விதமாக இத்தேர்வு நடத்தப்படுகிறது. இதில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு ஓராண்டுக்கு மாதந்தோறும் ரூ.2 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும்.

அதன்படி நடப்பு ஆண்டுக்கான திறனறித் தேர்வு நாடு முழுவதும் நவ.30 மற்றும் டிச.5 ஆகிய 2 நாட்கள் நடைபெற உள்ளது. கரோனா பரவல் காரணமாக இந்த தேர்வானது திறந்த புத்தகத் தேர்வாக இணையவழியில் நடத்தப்படும்.

ஆங்கிலம், தமிழ், இந்தி, மராத்தி மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் தேர்வு நடைபெறும். எனவே, மாணவர்கள் தங்கள் வீட்டில் இருந்தபடியே கணினி, செல்போன் மூலம் தேர்வை எழுதலாம்.

விருப்பமுள்ளவர்கள் https://vvm.org.in/ என்ற இணையதளத்தில் அக்.30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான தகுதிகள், தேர்வுக் கட்டணம், பாடத்திட்டம், பரிசுகள், பயிற்சி விவரம் உள்ளிட்ட கூடுதல் தகவல்களையும் இந்த இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என்று துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here