முடி உதிர்தலை குறைக்கும் செம்பருத்தி என்னை

0

இங்கு பலருக்கு கூந்தல் உதிரும் பிரச்சனை ஏற்படுகிறது. இந்த பிரச்சனைக்கு தீர்வு காண பல முயற்சிகளை எடுத்திருப்போம் ஆனால் முடி உதிர்தல் மட்டும் நின்றபாடில்லை

முடி உதிர்தலுக்கு செம்பருத்தி எண்ணெய் ஒரு தீர்வாகும். ஆனால் கடைகளில் வாங்கும் எண்ணெயை காட்டிலும் வீட்டில் எப்படி தயாரிப்பது என்பதை பற்றி பார்க்கலாம்

தேவையான பொருட்கள்:

செம்பருத்தி பூக்கள் – 30
ஆலிவ் எண்ணெய் – கால் லிட்டர்
தேங்காய் எண்ணெய் – கால் லிட்டர்
வெந்தயம் – 5 டீஸ்பூன் அளவு

முதலில் செம்பருத்தி இதழ்களை தனியா பிரித்து வைத்துக் கொள்ளவும். பின்னர், அடுப்பில் இருப்பு வானிலை ஆலிவ் எண்ணெய், தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்றாக கலந்து சூடேற்றவும். 5 முதல் 7 இதழ்களை மிக்ஸியில் அரைத்து எண்ணெயில் சேர்த்து கொள்ளவும். மீத இதழ்களை எண்ணெய்யில் போட்டு வெந்தயம் சேர்த்து அடுப்பை அணைத்து எண்ணெய்யை குளிர வைக்கவும்.

இந்த எண்ணெயை மூன்று மாதங்களுக்கு ஒரு முறை காய்ச்சி கொள்ளலாம். இந்த எண்ணெயை தினமும் முடி கால்களில் படுமாறு மசாஜ் செய்து வந்தால் முடி உதிர்தல் குறையும். இந்த எண்ணெய்களை குழந்தைகளுக்கு குளியல் எண்ணெயாகவும் பயன்படுத்தலாம். இந்த எண்ணெயை தொடர்ந்து பயன்படுத்தினால் உடல் உஷ்ணம் குறையும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here