ஆடி முடிந்தது ஆவணி தொடங்கியதால் சுப நிகழ்ச்சிகள் கோயில்களில் அனுமதி இல்லாத பொழுதும் கலைகட்டும் திருமணங்கள்

0

சென்னை: கடலூரில் கோவில்களில் அனுமதி இல்லாததால் கோவில் வாசலிலேயே புதுமண தம்பதிகள் தனிமனித இடைவெளி இல்லாமல் குவிந்தனர்.

தமிழகத்தில் ஆடி மாதம் முடிந்து ஆவணி மாதம் பிறந்திருப்பதால் திருமணங்கள் கலைக்கட்டியுள்ளன. ஆனால் கொரோனா பரவல் கட்டுப்பாடுகளால் கோவில்களில் அனுமதி இல்லாததால் பலரும் கோவில் வாயில்களில் கூடி திருமணம் செய்து வருகின்றனர்.கடலூர் அடுத்த திருவந்திபுரம் தேவநாதசாமி கோவிலுக்கு கடலூர், விழுப்புரம், புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து திருமண தம்பதியினர் குவிந்தனர்.

இங்கே சுமார் இன்று மட்டும் 100 திருமணங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா 3வது அலை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வழிபாட்டு தளங்களை வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 தினங்கள் வழிபாட்டு தளங்களை முழுவதுமாக மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் ஆடி முடிந்து ஆவணி மாத முதல் முகூர்த்த தினமான வெள்ளிக்கிழமையான இன்று சீர்காழி பகுதிகளில் உள்ள முக்கிய கோவில்களில் முக்கிய கோவில்களின் வாசல்களிலேயே திருமணங்கள் நடைபெற்றன.

சீர்காழி அருகே வைத்திஸ்வரன் கோவில் மூடப்பட்டுள்ளதால் கோபுர வாசலில் நின்று புதுமண தம்பதிகள் திருமணம் செய்து கொண்டனர். கொரோனா பெருந்தொற்றின் காரணமாக வெள்ளி, சனி, மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டு தளங்களில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்பதால் சுபமுகூர்த்த தினமான இன்று கோவில்களுக்கு வெளியே திருமணங்கள் நடைபெறுகின்றன. சென்னையில் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில், வடபழனி முருகன் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் திருமணங்கள் களைகட்டி வருகின்றன

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here