மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கை எப்போது ? சுகாதரதுறை அமைச்சர் பதில் த்

0

தமிழக அரசின் சட்டமன்ற கூட்டத்தொடர் கடந்த 13-ந் தேதி சென்னை கலைவாணர் அரங்கில் தொடங்கியது. அன்றைய தினம் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசின் முதல் நிதிநிலை அறிக்கையை தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார். நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் தற்போது நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், இன்று கூட்டத்தொடரின்போது அ.தி.மு.க. உறுப்பினர் ராஜன் செல்லப்பா, ” மாநிலத்தில் புதியதாக தொடங்கப்பட உள்ள 11 மருத்துவ கல்லூரிகளில் கூடுதல் இடங்களை உருவாக்க வேண்டும். கல்லூரி மாணவர் சேர்க்கை இந்த ஆண்டு தொடங்கப்படுமா?” என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த மருத்துவ கல்வித்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது, ” கடந்த 3 மாதங்களில் 11 மருத்துவ கல்லூரிகளில் கட்டுமான பணிகளை ஆய்வு செய்துவருகிறோம்.

இதுதொடர்பாக, மத்திய அரசிடம் அனுமதி கேட்டிருக்கிறோம். ஒரு கல்லூரிக்கு 150 மாணவர்கள் என்ற அடிப்படையில் இந்த ஆண்டே 1650 மாணவர்களின் சேர்க்கைக்கு மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். அனுமதி கிடைத்தவுடன் மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கை இந்த ஆண்டே தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கிறோம்” இவ்வாறு அவர் கூறினார்.

தமிழ்நாட்டில் ஏற்கனவே உள்ள மருத்துவ கல்லூரிகளுடன் புதியதாக 11 மருத்துவ கல்லூரிகளுக்கான ஒப்புதல் கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் பெறப்பட்டது. பின்னர், அந்த மருத்துவ கல்லூரிகளுக்கான நிதிகள் மத்திய அரசால் படிப்படியாக ஒதுக்கப்பட்டு, மருத்துவ கல்லூரிக்கான கட்டுமான பணிகள் படிப்படியாக நடைபெற்று வருகிறது. கட்டுமான பணிகள் பெரும்பாலும் நிறைவு பெற்றுள்ள காரணத்தால், மருத்துவ மாணவர் சேர்க்கையை விரைவில் தொடங்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர். அதற்கான பணிகளில் மாநில அரசும் ஈடுபட்டு வருகிறது.

மேலும், மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் 36 மாதங்களுக்குள் முடிக்கப்படும் என்று நம்பப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் அரசு தகவல் தெரிவித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும், நீதிமன்ற உத்தரவிற்கு காத்திருக்காமல் எய்ம்ஸ் மருத்துவமனை பணிகளையும் தொடங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்காக நீட் தேர்வு நடத்தப்பட்டு வருவதால், தற்போது தமிழக மாணவர்கள் நீட் தேர்விற்கு தயாராகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அமைச்சரின் இந்த முடிவை மாணவர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here