மீன்பிடி தடைக்கால நிவாரண தொகையாக ஐந்தாயிரம் ரூபாய் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருக்கிறார்.

0

ஒவ்வொரு ஆண்டும் கடல் மீன் வளத்தை பேணிக்காத்திட தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் கிழக்கு கடற்கரை பகுதியில் ஏப்ரல் 15ஆம் தேதி முதல் ஜூன் 14 ஆம் தேதி வரையிலும், மேற்குக் கடற்கரைப் பகுதியில் ஜூன் 1-ஆம் தேதியிலிருந்து ஜூலை 31 ஆம் தேதி வரையிலும் 61 நாட்களுக்கு மீன் பிடி தடைகாலம் அமல்படுத்தப்பட்டு வருகிறது.

அந்த காலகட்டத்தில் வங்கக் கடலில் மீன்பிடிக்க தடை காலம் உள்ளது. இந்த இரண்டு மாத காலத்திற்கான நிவாரணத் தொகையாக 5 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இந்த நிவாரண மூலமாக தமிழகத்தில் இருக்கக்கூடிய ஒரு லட்சத்து 72 ஆயிரம் மீனவர்கள் பலன் பெறுவார்கள் என கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here