இந்த 2021-ல் நீங்கள் இப்போது ‘சாத்தான் காலணிகளை’ வாங்கலாம், அவற்றில் மனித இரத்தத்தின் உண்மையான துளி உள்ளது. ப்ரூக்ளினில் உள்ள எம்.எஸ்.சி.எச்.எஃப் (MSCHF) என்ற நிறுவனத்துடன் இணைந்து அமெரிக்க ராப்பர் லில் நாஸ் எக்ஸ் (Lil Nas X) அறிமுகப்படுத்திய காலணிகள், பென்டாகிராம் மற்றும் 666 என்ற எண்ணால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.

சாத்தான் காலணிகளின் ஒவ்வொரு ஜோடியிலும் ஒரு காற்று குமிழியை நிரப்ப மை உடன் எம்.எஸ்.சி.எச்.எஃப் ஊழியர்களின் ரத்தத்தை கலந்துள்ளதாக கூறப்படுகிறது.
கருப்பு மற்றும் சிவப்பு ஸ்னீக்கர்கள் நைக் ஏர் மேக்ஸ் 97 களைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்டன. இந்த காலணிகளின் விற்பனை தொடங்கிய ஒரு நிமிடத்திற்குள் விற்றுவிட்டதாக சிஎன்என் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது..
இருப்பினும், நைக் நிறுவனம் சாத்தானிய காலணிகளை உருவாக்கிய எம்.எஸ்.சி.எச்.எஃப் நிறுவனம் மீது வழக்குத் தொடுத்துள்ளது.. நியூயார்க்கில் உள்ள ஃபெடரல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கில், தங்கள் நிறுவனத்தின் ஒப்புதல் மற்றும் அங்கீகாரமின்றி” காலணிகள் தயாரிக்கப்பட்டதாகவும், தங்கள் நிறுவனத்திற்கு இந்த திட்டத்துடன் எந்த வகையிலும் இணைக்கப்படவில்லை என்றும் நைக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த சாத்தான் காலணிகளுக்கு நைக் நிறுவனம் அங்கீகாரம் அளித்துள்ளதாக தவறான நம்பிக்கையின் அடிப்படையில் எம்.எஸ்.சி.எச்.எஃப் இன் சாத்தான் ஷூக்களை அறிமுகப்படுத்தியதற்கு பதிலளிக்கும் விதமாக நை நிறுவனம் இந்த வழக்கு தொடர்ந்துள்ளது.. எம்.எஸ்.சி.எச்.எஃப் நிறுவனம் காலணிகள் விற்பனை உடனடியாக நிறுத்துமாறு நைக் நிறுவனம் நீதிமன்றத்தை கேட்டுக்கொண்டுள்ளது.