மின் கட்டணத்தை ரத்து செய்ய கோரிக்கை!!

0

TN Electricity Bill | கொரோனா காலத்தில் மின்கட்டணத்தை முழுமையாக ரத்து செய்ய எழும் கோரிக்கைகள்

 மே மாதத்திற்கான மின் கட்டணத்தை, பொதுமக்களே கணக்கிட்டுக் கொள்ளலாம் என்கிற தமிழக அரசின் முடிவுக்கு, ஆதரவும், எதிர்ப்பும் ஒருசேர கிளம்பியுள்ளது. கொரோனா காலத்தில் மின்கட்டணத்தை முழுமையாக ரத்து செய்யவும் கோரிக்கை எழுந்துள்ளது.

SHARE THIS:

TN Electricity Bill | கொரோனா காலத்தில் மின்கட்டணத்தை முழுமையாக ரத்து செய்ய எழும் கோரிக்கைகள்

Advertisementதமிழ்நாடு மின்சார வாரியத்தின் கீழ் இயங்கும் மின் பகிர்மான கழகத்தின் சார்பாக வீடுகள், தொழிற்சாலைகள் உள்ளிட்டவைகளுக்கு மின்சாரம் வழங்கப்படுகிறது. இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மின்வாரிய ஊழியர்களால் யூனிட்கள் கணக்கிடப்பட்டு, மின் கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது. இந்தநிலையில் கொரோனா பரவும் சூழலால், மின்வாரிய ஊழியர்கள் தற்போது கணக்கீடு செய்யவில்லை. இதனால் 2019-ம் ஆண்டு மே மாதம் செலுத்திய கட்டணத்தையே தற்போது செலுத்த வேண்டும் எனவும், அடுத்த கணக்கீட்டின் போது கூடுதலாக கட்டப்படும் கட்டணம் சரி செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டு இருந்தது.

ஆனால் இதற்கு பொதுமக்களிடையே எதிர்ப்பு கிளம்பியது. இதனையடுத்து பொதுமக்களே மின் கட்டணத்தை கணக்கிட அனுமதி வழங்கப்பட்டது. அதன்படி தங்களது வீடுகளில் உள்ள மின் மீட்டர்களில் எவ்வளவு யூனிட் மின்சாரம் செலவழிக்கபட்டுள்ளது என்பதை கணக்கிட்டு, அதனை சம்பந்தப்பட்ட உதவி பொறியாளர் அலுவலகத்திற்கு நேரடியாக சென்றோ அல்லது செல்போன் மூலமாகவோ தகவல் தெரிவிக்க வேண்டும். அதன்பிறகு மின்கட்டணம் எவ்வளவு கட்டவேண்டும் என்பதை ஆன்லைன் மூலமாக நுகர்வோருக்கு மின்சார வாரியம் தெரிவிக்கும். அதனை நேரடியாகவோ ஆன்லைன் மூலமாகவோ பொதுமக்கள் செலுத்தலாம் என அரசு அறிவித்துள்ளது.

சுய கணக்கீடு மூலம் kattanamசெலுத்தும் முறைக்கு நுகர்வோர் பலர் வரவேற்பு தெரிவித்துள்ளனர். ஒரு சிலர் கூறும்போது, கொரோனா காலத்தில் வேலையிழந்து தவிக்கும் சூழல் உருவாகியுள்ளதால், மின்கட்டணத்தை முழுமையாக ரத்து செய்யவேண்டும் எனவும் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement
எனினும் பொதுமக்களே மின் பயன்பாட்டு அளவை சுயகணக்கீடு செய்வது சாத்தியம் இல்லை என்று  சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். மின் வாரியத்தில் வெவ்வேறு நிறுவனங்களின் மீட்டர்கள் பொருத்தப்பட்டுள்ளதால், ஒவ்வொன்றிலும் மின் பயன்பாட்டு அளவின் குறியீடு வேறு மாதிரி கணக்கிடப்படும் என்கின்றனர். தமிழக அரசின் இந்த அறிவிப்பால், 5 முதல் 10 சதவீத மக்கள் மட்டுமே சரியாக கணக்கீடு செய்யமுடியும் எனவும், இந்த நடைமுறை சாத்தியமற்றது எனவும் தெரிவித்தனர்.

மேலும் படிக்க…

சுயகணக்கீடு மூலம் ஏற்படும் சிரமங்கள் விரைவில் சரி செய்யப்படும் என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here