பித்தபையில் கற்கள் உருவாவது ஏன்?

0

பித்தப்பையில் கற்கள் உருவாவது ஏன்?


பித்தப்பையில் கற்கள் உருவாவது ஏன்?

பித்தமானது நமது உணணவில் உள்ள கொழுப்புசத்தை கிரகித்து கொள்ள தேவைப்படுகிறது. மேலும் பித்தமானது கழிவுப் பொருட்கள், பித்த தாது உப்புகள், வேண்டாத கொலஸ்ட்ரால்களை வெளியேற்ற உதவுகின்றது. கல் உற்பத்தியாவதற்கு, பித்தத்தில் உள்ள கொலஸ்ட்ரால், கால்சியம் உப்புகள், தாதுக்களை கரைச்சல் வடிவத்தில் வைக்க பித்தம் தோல்வியடையும் போது கல் உருவாகின்றது.

பலருக்கு பித்த கற்கள் எந்த தொந்தரவும் தராமல் இருக்கும். சிலருக்கு பித்தம் வரும் குழாய் அடைக்கப்பட்டு வலி உண்டாகலாம். அதனால் பித்தப்பை சுழற்சி அழுகிப்போகுதல், நுண்கிருமிகள் தொற்றி, வலி, காய்ச்சல், மஞ்சள் காமாலை உருவாகலாம்.


ஏந்த தொந்தரவும் தராத கற்கள் உள்ளவாகளில் ஆன்டொன்றில் 1-2 சதவீத நோயாளிகளுக்கு தொந்தரவும், அதற்கான வைத்தியமும் செய்ய நேரிடலாம். ஆதிக காலம் கற்கள் தொந்தரவு தராமல் இருந்தால், அது தொந்தரவு தர வாய்ப்பு குறைவு.


அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன்:

சுமார் 91 சதவீத பித்த கற்களை இதன் மூலம் கண்டுபிடிக்க இயலும், எக்ஸ்ரே மூலம் 10-15 சதவீத பித்தக்கற்களை மட்டுமே கண்டுபிடிக்க இயலும்.
கோலிஸ்ண்டிகிராபி- இதன் மூலம் பித்தப்பை, பித்தக்குழாய், கல்லீரல் முதலியவற்றின் செயல்பாட்டினை அறிய முடியும்.
வயிற்றின் மேல் பகுதியில் வலது பக்கமாக, திருகு வலியாகவும், அந்த வலி வலதுதோள், முதுகு போன்ற இடத்திற்கு பரவவும் செய்யலாம், மஞசள் காமாலை மற்றும் விட்டுவிட்டு மஞ்சள் காமாலை, காய்ச்சல், வாந்தி, வயிற்றுவலி பொதுவாக கொழுப்பு சத்து நிறைந்த உணவு எடுத்துக்கொண்டால் வரும். புளித்த ஏப்பம், நெஞ்சு கரிப்பு, உப்புசம் ஆகியவை நோய் அறிகுறியாகும்.

வைத்திய முறைகள்:

கிருமிகளை அழிக்கும் ஆண்டியாடிக் மருந்து, படுக்கை ஓய்வு, வலி நிவாரண மருந்துகள், ஆப்பரேசன் சேப்ராஸ்கோபிக் அறுவை சிகிச்சை, திறந்தவகை அறுவை சிகிச்சை, ரஸ்டோஸ் கோபி முறை லேப்ராஸ்கோபி அறுவை சிகிச்சை எனப்படும். சாவி துவார துளை வழியாக பித்தப்பை அகற்றுதல்.

நன்மைகள்:


குறைந்த ரத்தசேதம், சிறு தழும்பு, ஆபரேசனுக்கு பின்பு பணிக்கு விரைவாக செல்லுதல், வலி குறைவு, குடல் இறக்கம் போன்ற தையல் விடுவதால் வரக்கூடிய தொந்தரவு குறைவு, காரணமாக வேலைகளை வழக்கம்போல் செய்ய முடியும்.

தீமைகள்:

சில நேரங்களில் மிகவும் அழகிய நிலையில் உள்ள பித்தப்பையை இந்த வகை ஆப்பரேசன் மூலம் அகற்றுவது கடினம், பித்தப்பை புற்றுநோய் ஏற்பட்டிருப்பின் இந்த வகை ஆபரேசன் செய்தல் கூடாது. சில நேரங்களில் இரத்த கசிவை நிறுத்துவது கடினமாகி, திறந்த வகை ஆபரேசனுக்கு மாற்றப்பட வேண்டியது ஆகலாம்.


திறந்த வகை ஆபரேசன் நன்மைகள்:


பித்தப்பை புற்றுநோய்கள் அதிக இரத்த சேதம் ஏற்பட நேர்தல், அழுகிய நிலையில் உள்ள பித்தப்பை, மிள நீளமான தழும்பு, வேலைக்கு செல்வதற்கு தாமதம், அதிக வலி, மிக கடினமான வேலை செய்தல் சிரமம், குடல் இறக்கம் போன்ற நோய்கள் வர வாய்ப்பு, எண்டாஸ்கோபி மூலம் அகற்றுதல், வாய் வழியாக இந்த கருவியை இரப்பை சிறுகுடல், பித்தக்குழாய் வழியாக செலுத்தி பித்தக்குழாய் கற்களை அகற்றுதல்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here