பாலில் உள்ள அபாயம்..எச்சரிக்கை!!!

0

பாலில் இருக்கும் அபாயம

inner 3

பால் பொருட்கள்கூட எளிதாக நச்சுத்தன்மை பெறலாம். அழுக்கு அல்லது மலக்கழிவு கலந்திருப்பது, பதப்படுத்தும் இயந்திரத்தின் பாதிப்பு, பசுவின் மடியில் ஏற்படும் தொற்று, பசுவின் நோய்கள், மாடுகளின் தோலில் வசிக்கும் கிருமிகள், பூச்சிகள் ஆகியவற்றால் பாதிப்பு உண்டாகலாம். “பசு, எறுமை மாடுகள் பூச்சிக்கொல்லி, ராசாயன நச்சு கொண்ட தீவனங்களை உட்கொள்வதால் பால் பொருட்களில் சால்மோனெல்லா போன்ற பாக்டீரியாக்கள் இருக்கலாம். அதனால் பால் பொருட்களை பதப்படுத்தும் போது கவனமாக இருக்க வேண்டும்’’ என்கிறார் தில்லி ஃபோர்டிஸ் மருத்துவமனையைச் சேர்ந்த டாக்டர் சிம்ரன் சைனி.

“இந்தியாவில் மாடுகள் குப்பைகளை மேய்கின்றன. இதனால் நச்சுக்களை உட்கொள்கின்றன. இது பாலின் தரத்தை பாதிக்கிறது. பால் பண்ணை உரிமையாளர்கள் தங்கள் பங்கிற்கு நச்சை சேர்க்கலாம். பாலில் நீர், யூரியா, காஸ்டிக் சோடா கலக்கப்படலாம். பால் பொருட்களில் பயன்படுத்தப்படும் செயற்கை வண்ணங்களில் நச்சுக்கள் கலந்திருக்கலாம். காட்டேஜ் சீஸ் தயாரிக்க நச்சுத்தன்மை கொண்ட ஆர்கிமோனே எண்ணெய் பயன்படுத்தப்படலாம். இதன் நீண்டகால பயன்பாடு சிறுநீரக, கல்லீரல் பாதிப்பை ஏற்படுத்தும்” என்கிறார் குர்காவ்னின் டபிள்யூ பிரதிக்‌ஷா மருத்துவமனையின் ஊட்டச்சத்து வல்லுனரான தீப்தி திவாரி.

பாலின் தன்மையைப் பாதுகாப்பதற்காக கார்பனே சேர்க்கப்படுவதும் பாதிப்பை உண்டக்கலாம். அதனால் இயற்கை உணவுகளிலும் உஷாரய்யா உஷாரு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here