பள்ளியில் பாலியல் புகார்!!

0

மாணவிகளுக்கு பள்ளி ஆசிரியர் மோசமான குறுஞ்செய்தி அனுப்பிய விவகாரத்தில் தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் விசாரணை மேற்கொண்டுள்ளது.

சென்னை தனியார் பள்ளியின் ஆசிரியர் மாணவியிடம் ஆபாசமான குறுஞ்செய்திகளை அனுப்பிய விவகாரத்தில் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஆசிரியரின் இந்த செயலுக்கு பல தரப்பினரும் கண்டம் தெரிவித்து வரும் நிலையில், தமிழக கல்வித்துறை ஆன்லைன் வகுப்பு கட்டுப்பாடுகளை அதிகரிப்பது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறது. இந்நிலையில், தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.

இதுகுறித்து ஆணையம், கொரோனா காலத்தில் மாணவர்கள் கல்வி கற்பிக்க ஆன்லைன் வகுப்புகள் அதிகமாகி வருகிற சூழ்நிலையில் இதுபோன்ற சம்பவம் வருத்தமளிப்பதாக தெரிவித்துள்ளது.

பள்ளி, கல்லூரிகளில் இதுபோன்ற குற்றங்கள் நடைபெறாமல் இருப்பதை உறுதிப்படுத்தவேண்டும் எனவும் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது. மேலும், 3 நாட்களுக்குள் முழு அறிக்கையை தாக்கல் செய்ய டிஜிபிக்கு தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் ஆணையிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here