நான் தான் ஒரே மாலுமி, நம்பிக்கை இருந்தால் என்னோடு பயணம் செய்யுங்கள், இல்லையெனில் கட்சியில் இருந்து புறப்படுங்கள்

0

மதுரை அருகே ஒத்தக்கடையில் தனியார் திருமண மண்டபத்தில்  நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நடைபெற்றது, இதில் கலந்துகொண்ட சீமான் பேசியபோது : “மக்காக மக்கள் காத்திருக்கிறார்கள் அவர் அருகில் செல்லுங்கள், நான் அறிவித்த வேட்பாளர் குறித்து என்னிடம் கேள்வி கேட்கக்கூடாது, நான் போட்ட கோட்டிற்குள் தான் நீங்கள் செயல்பட வேண்டும் என்று பேசிய சீமான், நான் எந்த திசையை நோக்கி ஒடுகிறேனோ அதை திசையில் நீங்களும் ஓட வேண்டும் என தொண்டர்களிடம் பேசினார்.

உங்களின் கருத்துகளை கேட்டு நான் நடக்கமாட்டேன், நாம் தமிழர் கட்சி என்ற கப்பலுக்கு நான் தான் ஒரே மாலுமி, நம்பிக்கை இருந்தால் என்னோடு பயணம் செய்யுங்கள், இல்லையெனில் கட்சியில் இருந்து புறப்படுங்கள், நாம் தமிழர் கட்சியில் நான்தான் கட்டளை தளபதி, இன்று வந்து சேர்பவர்களுக்கு கூட தேர்தலில் வாய்ப்பளிப்பேன், நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் பரிதாபத்துக்குரியவர்கள், நம் கட்சியில் உள்ளவர்கள் பிச்சை எடுக்கிறோம் வாருங்கள் வேட்பாளர்களே சேர்ந்து பிச்சை எடுக்கலாம்.

நாம் தமிழர் கட்சி மீது நம்பிக்கையை உருவாக்க வேண்டும் அதுவரை ஓயமாட்டேன். ஒதுக்கக்கூடிய சமூகத்திற்கு நாம் தமிழர்கள் கட்சியில் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கிறோம். உலகமே என் பேச்சை கேட்கும், ஆனால் நான் பிரபாகரன் பேச்சை தவிர யார் பேச்சையும் கேட்க மாட்டேன், நாம் அனைத்து தேர்தலிலும் போட்டியிடுவோம், கட்சி அறிவித்த வேட்பாளர்களின் வெற்றிக்காக பாடுபடுங்கள், இந்த தேர்தலில் விட்டுவிட கூடாது போராட வேண்டும், ஒருங்கிணைந்து போராட வேண்டும்.

 தேர்தல் நேரத்தில் 3மாதங்கள் இரவு பகலாக பாடுபட வேண்டும், ஹிட்லர் பேசியது எல்லாமுமே எனக்காக பேசியது தான், என் மீது எறிவது வைர கற்களாக இருந்தால் எடுப்பேன், கற்களாக இருந்தால் தடுப்பேன், மனுநீதி சோழனிடம் மணி அடித்து நீதி கேட்ட மாட்டை போன்ற சம்பவம் இப்போது நடந்திருந்தால் மாட்டை அடித்து பிரியாணி போட்டிருப்பார்கள். நாம் தமிழர் கட்சி உறுப்பினர்கள் தொண்டர்கள் அல்ல புரட்சியாளர்கள் தீக்குச்சிகள்.

வேட்பாளர்கள் அறிவிப்பிற்கு யாரேனும் எதிர்ப்பு தெரிவித்தால் கவுண்டமணி செந்தில் திரைப்பட காமெடியில் கவுண்டமணி கிரீஸ் டப்பாவை மிதிப்பது போல மிதித்து விடுவேன், சட்டமன்ற தேர்தலை போர் போல் நினைத்து உழைக்க வேண்டும். விவசாய சின்னம் தெரியாத வீடு இல்லை என்பது போல அனைவருக்கும் சின்னத்தை கொண்டு செல்லுங்கள்” என்றார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here