தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து பள்ளி கல்வித்துறை புதிய முடிவு..!

0

தமிழகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் கடந்த ஆண்டு மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டன. அதன்பிறகு மாணவர்களின் நலனைக் கருதி அனைத்து வகுப்பு மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டதால் அனைத்து பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது. ஒரு சில வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஆனால் பள்ளிகள் திறப்பு குறித்த எந்த ஒரு அறிவிப்பும் தற்போது வரை வெளியாகவில்லை.

இந்நிலையில் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து பெற்றோர் மற்றும் கல்வியாளர்களிடம் கருத்து கேட்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து பேசிய அதிகாரிகள், பொதுத்தேர்வு எழுத உள்ள 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு மட்டும் ஆகஸ்ட் மாதத்தில் பள்ளிகளை திறக்க பரிசீலித்து வருகிறோம். பெற்றோர் மற்றும் கல்வியாளர்களிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டு அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here