தமிழகத்தில் இ‌ன்று‌ம் சென்னையை விட கோவை இல் நோய் பாதிப்பு அதிகம்!

0

சென்னை

மிழகத்தில் இன்று சென்னையில் 2,779 பேரும் கோவையில் 4,734 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இன்று 33,764 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 19,78,621 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 22,289 பேர் உயிர் இழந்து 16,43,284 பேர் குணம் அடைந்து தற்போது 3,13,048 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் இன்று 2,779 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. இதுவரை சென்னையில் 4,93,881 பேர் பாதிக்கப்பட்டு 6,723 பேர் உயிர் இழந்து 4,43,534 பேர் குணம் அடைந்து தற்போது 43,624 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மொத்த கொரோனா பாதிப்பில் கோவை மாவட்டம் இரண்டாம் இடத்தில் உள்ளது.

ஆனால் இன்றும் இங்கு 4,734 பேர் பாதிக்கப்பட்டு தினசரி பாதிப்பில் கோவை மாவட்டம் முதல் இடத்தில் உ ள்ளது.

இதுவரை கோவை மாவட்டத்தில் 1,55,820 பேர் பாதிக்கப்பட்டு 1,135 பேர் உயிர் இழந்து 1,17,197 பேர் குணம் அடைந்து தற்போது 37,488 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மூன்றாவதாக செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது. இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 1,35,289 பேர் பாதிக்கப்பட்டு 1,669 பேர் உயிர் இழந்து 1,18,762 பேர் குணம் அடைந்து தற்போது 14,858 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் – 20/02/2021 தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் – 17/03/2021 தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் -10/05/2021

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here