தமிழகதிற்கு NEET தேர்வு கூடாது. அமைச்சர் முடிவு!

0

Neet Exam | தமிழகத்திற்கு நீட் தேர்வு கூடாது : அமைச்சர் பொன்முடி உறுதி

பிளஸ் 2 பொதுத் தேர்வு மதிப்பெண் அடிப்படையிலேயே தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும் என மத்திய அரசின் ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் பொன்முடி உறுதிப்பட தெரிவித்துள்ளார்.

Neet Exam | தமிழகத்திற்கு நீட் தேர்வு கூடாது : அமைச்சர் பொன்முடி உறுதி

நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகளின் இறுதியாண்டுத் தேர்வுகளை நடத்துவது குறித்து, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் காணொலிக் காட்சி வாயிலாக உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், தமிழகம் சார்பில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வுகள் நடத்தும் முறை குறித்து எடுத்துரைத்தார்,

மேலும், தமிழக அரசின் இறுதி நிலைப்பாட்டை முதலமைச்சருடன் கலந்தாலோசித்து மத்திய அரசிற்கு தெரிவிப்பதாக கூறினார். இதையடுத்து பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, தமிழகத்திற்கு நீட் தேர்வு கூடாது என்றும், பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு மதிப்பெண் அடிப்படையிலேயே மருத்துவ கல்லூரிகளுக்கான சேர்க்கை நடைபெற வேண்டும் எனவும் உறுதிப்பட தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here