செப்டம்பர் 1 முதல் பள்ளிகள் திறப்பு..வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட தமிழக அரசு!

0

தமிழகத்தில் செப். 1 முதல் பள்ளிகள் திறக்கப்படும் என கூறப்பட்ட நிலையில் அனைவரும் பின்பற்றப்பட வேண்டிய கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக மருத்துவத்துறை வெளியிட்டுள்ளது

கொரோனா தொற்று காரணமாக 2020 மார்ச் மாதம் முதல் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதை தொடர்ந்து கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மூடபட்ட பள்ளிகள் கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் மீண்டும் திறப்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை பல்வேறு தரப்பினரிடையே ஆலோசனை மேற்கொண்டது.

அதன் அடிப்படையில் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 9 முதல் 12 வகுப்பு வரை மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்க உத்தேச தேதியை தமிழக அரசு அறிவித்திருந்தது.

இந்நிலையில், பள்ளிகள் திறக்கப்பட்டால் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை மாநில மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை வெளியிட்டுள்ளது.

கொரோனா பரவலை தடுக்க மாணவர்களை 6 அடி இடைவெளியில் அமரவைக்க வேண்டும்.

மாணவர்கள் கைகழுவும் வசதி, உடல் வெப்பப் பரிசோதனை செய்யப்படும் கருவி ஆகியவை பள்ளிகளில் இடம்பெற வேண்டும்.

இதமான சூழல் இருந்தால் மாணவர்களை பள்ளி வளாகத்தில் அமரவைத்து பாடங்களை நடத்தலாம்.

முதல் நாளில் 50% மாணவர்களும், மறுநாளில் எஞ்சிய 50% மாணவர்களும் மாறி மாறி பள்ளிக்கு வரவேண்டும்.

கொரோனா அறிகுறி உள்ள மாணவர்கள், ஆசிரியர்களை பள்ளி வளாகத்துக்குள் அனுமதிக்கக் கூடாது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here