சென்னையில் குறைந்து வரும் நோய் பாதிப்பு!!! மக்கள் நிம்மதி!

0

சென்னை: சென்னையில் கொரோனா நேர்மறை விகிதம் 14.2% ஆக குறைந்துள்ளது. இதன் காரணமாக மருத்துவமனைகளில் படுக்கைகள் தொடர்ந்து காலியாகி வருகின்றன.

தமிழகத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு 36,000-ஐ கடந்து அச்சுறுத்திய கொரோனா வைரஸ் தற்போது 34,000-க்கு கீழ் குறைந்து ஆறுதல் அளிக்கிறது.

தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள முழு ஊரடங்கு தற்போது கைமேல் பலன் அளிக்க தொடங்கியுள்ளது. அதுவும் தலைநகர் சென்னையில் தொடர்ந்து குறைந்து வரும் பாதிப்பு மற்ற மாவட்ட மக்களுக்கு புது நம்பிக்கையை கொடுத்துள்ளது. சென்னையில் ஒரு சில வாரங்களுக்கு முன்பு 6,000-ஐ கடந்து சென்ற கொரோனா தற்போது 4,000-க்குள் குறைந்துள்ளது மிகவும் மகிழ்ச்சியான விஷயமாகும்.

சென்னையில் ஆக்டிவ் கேஸ்கள் 49,000-ல் இருந்து 45,738 ஆகக் குறைந்துவிட்டன என்று மகிழ்ச்சி தெரிவிக்கிறார் கொரோனா வைரஸ் தரவு ஆய்வாளர் விஜய் ஆனந்த். சென்னையில் கொரோனா நேர்மறை விகிதம் 14.2% ஆக குறைந்துள்ளது. இதன் காரணமாக மருத்துவமனைகளில் படுக்கைகள் தொடர்ந்து காலியாகி வருகின்றன

சென்னை மருத்துவமனைகளில் ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கை ஆக்கிரமிப்பு இன்று 87.9% ஆக குறைகிறது அதாவது 1171 படுக்கைகள் காலியாகி விட்டது. அவசர சிகிச்சை பிரிவின்(ஐ.சி.யூ) படுக்கை ஆக்கிரமிப்பு 97% ஆக குறைந்துள்ளது. அதாவது 67 படுக்கைகள் காலியாக உள்ளது. சென்னையில் பாதிப்பு குறைந்து வருவதுபோல் மற்ற பகுதிகளிலும் குறைந்து நமது மாநிலம் கொரோனாவில் இருந்து முழுமையாக விடுபட வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாகும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here