சலூன், டாஸ்மாக் கடைகள் திறப்பு!

0

தமிழ்நாட்டில் நடைமுறையில் இருந்து வரும் ஊரடங்கு வரும் 14ஆம் தேதி காலை 6 மணிக்கு முடிவுக்கு வரும் நிலையில் ஊரடங்கு 21ஆம் தேதி காலை 6 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இந்த ஊரடங்கின் போது கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களை தவிர இதர 27 மாவட்டங்களில் நோய் தொற்று குறைந்து வருவதை கருத்தில் கொண்டு ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள சில செயல்பாடுகளுடன் கூடுதலாக கீழ்க்கண்ட சில அனுமதிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

1) அழகு நிலையங்கள், சலூன்கள் குளிர்சாதன வசதி இல்லாமல் ஒரே நேரத்தில் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி

2) டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி

3) கட்டுமானப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை அனுமதி

4) செல்பேசி மற்றும் அதனைச் சார்ந்த பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை அனுமதி

4) பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கை தொடர்பான நிர்வாக பணிகளுக்கு அனுமதி

5) மிக்ஸி, கிரைண்டர், டிவி, பிரிட்ஜ் உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை அனுமதி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here