கோவை இல் CORONAVIRUS தடுப்பு பணிகளில் பின்னடைவு!

0

கோவை மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதால், கொரோனா தடுப்புப் பணிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் ஆக்சிஜன் படுக்கைகளின் தேவையும் அதிகரித்திருப்பதால் நிலைமை சிக்கலாகி இருக்கிறது.

கோவை மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசிகள் உள்ளனவா? இல்லையா?

கோவையில் மே 19-ல் 51,000 கொரோனா தடுப்பூசிகள் இருப்பு இருந்தன. கோவையில் கடந்த 19 ஆம் தேதி, 44 ஆயிரம் கோவிஷீல்டு, ஏழாயிரம் கோவாக்சின் என 51 ஆயிரம் கொரோனா தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்தது. 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு வரதராஜபுரம் மாநகராட்சி பள்ளி, அரசு கலைக்கல்லூரி உள்ளிட்ட இடங்களிலும், மருத்துவமனைகளிலும் தடுப்பூசி போடப்பட்டது.

அவர்கள் பற்றிய தகவல்கள், தடுப்பூசிகளின் இருப்பு விபரங்களை வெளியிட்டு வந்த மாவட்ட நிர்வாகம் திடீரென அதனை நிறுத்தி வைத்துள்ளது.

தடுப்பூசிகளை செலுத்த அரசுத் தரப்பிலிருந்து வழிகாட்டு நெறிமுறைகள் வரவில்லை என சுகாதாரத்துறையினர் கூறுகின்றனர். கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன்வருவோர், எங்கு சென்று தடுப்பூசி போடுவது என தெரியாமல் குழப்பத்தில் உள்ளனர்.

கோவை மாவட்டத்தைப் பொறுத்தவரை ஒரே நாளின் கொரோனா பாதிப்பு 4,200-ஐ தாண்டிவிட்டது. மாவட்டம் முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் உள்ள 3,957 ஆக்சிஜன் படுக்கைகளும் நிரம்பி விட்டன. நிலைமையை சமாளிக்க கோவை அரசு மருத்துவமனையில் ஜீரோ வார்டு ஏற்படுத்தப்பட்டது. இந்த ஜீரோ வார்டில் ஆம்புலன்சில் வரும் நோயாளிகளுக்கு வார்டில் படுக்கை ஒதுக்கப்படும் வரை முதலுதவி அளிக்கப்படும். ஆனால் இங்கிருந்தும் சிகிச்சை வார்டுக்கு செல்ல 12 மணி நேரத்துக்கு மேலாக காத்திருக்க வேண்டியுள்ளது.

ஜீரோ வார்டும் தற்போது நிரம்பியுள்ளது. தடுப்பூசி குழப்பம், ஆக்சிஜன் படுக்கை பற்றாக்குறை என கோவை மாவட்டத்தில் கொரோனா தடுப்புப் பணிகளில் பெரும் பின்னடைவு காணப்படுகிறது. இதுகுறித்து கேட்டபோது, சுகாதாரத் துறையினரிடம் கேட்டுக் கொள்ளுமாறு கோவை மாவட்ட ஆட்சியர் நாகராஜன் கூறிவிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here