ஊரடங்கு இல் தளர்வுகள் வழங்க தமிழக அரசுக்கு பரிந்துரை!

0

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீடிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகிறது.

தமிழகத்தில் தற்போது அமலில் இருக்கும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு, வரும் 14ஆம் தேதி காலை 6 மணியுடன் முடிவடைகிறது. இதனால், ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் காலை 11 மணிக்கு ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது. அக்கூட்டத்தில் அமைச்சர் சுப்பிரமணியன், தலைமை செயலாளர் இறையன்பு, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், டிஜிபி திரிபாதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த நிலையில், கொரோனா பரவலை தடுக்க தமிழ்நாட்டில் மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கை நீட்டிக்க உயரதிகாரிகள் முதல்வர் ஸ்டாலினிடம் பரிந்துரைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here