இந்த 5 இடங்களுக்குச் செல்ல E-Pass கட்டாயம்!

0
  • தமிழகத்தில் ஜூன்-14ம் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கை நீடித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு.
  • நீலகிரி மாவட்டம், கொடக்கானல், ஏற்காடு, ஏலகிரி, குற்றாலம் பகுதிகளுக்கு அவசர காரணங்களுக்காக பயணிக்க தொடர்புடைய மாவட்ட ஆட்சியர்களிடமிருந்து இ-பாஸ் பெற்று பயணிக்க அனுமதி.

தமிழகத்தில், ஜூன்-7ம் தேதியுடன் ஊரடங்கு நிறைவு பெறும் நிலையில், நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இது தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கை நீட்டிக்குமாறு மருத்துவர் குழு பரிந்துரை செய்தது.

இந்நிலையில், தற்போது இது ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பான செய்திகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், ஜூன்-14ம் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கை நீடித்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ஆனால், தொற்று பாதிப்பு அதிகமாக உள்ள 11 மாவட்டங்களுக்கு கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நீலகிரி மாவட்டம், கொடக்கானல், ஏற்காடு, ஏலகிரி, குற்றாலம் பகுதிகளுக்கு அவசர காரணங்களுக்காக பயணிக்க தொடர்புடைய மாவட்ட ஆட்சியர்களிடமிருந்து இ-பாஸ் பெற்று பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here