அழகான நகம் பெற…

0

இருபது நிலவுகள் நகமெங்கும் ஒளிவிடும்” என்று ஒவ்வொரு நகத்தையும் ஒரு நிலவுக்கு ஒப்பிட்டிருக்கிறான் ஒரு கவிஞன். நிலவுக் கொப்பான் நகங்களை அழகாகவும், சுத்தமாகவும் வைத்துக் கொள்வது அவசியம்தானே!
முறையற்ற கருவிகள், சிதறிய கவனம், ஒழுங்கற்ற முறையில் நகத்தை வெட்டுவது போன்றவை நகங்களின் வளர்ச்சியையும், அழகையும் பாதிக்கும்.

போர்த்தியுள்ள தோலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நகங்களை சீராக வெட்டி விடவும்.

நகம் வெட்டுவதற்கு முன்பு சோப்பு நீர் உள்ள பேசினில் ஊறவிடவும். நகம் வெட்டிய பின்னர் மேல் தோலைப் பராமரிக்கும் க்ரீம் தடவவும்.

புதிதாக நகத்துக்கு பாலிஷ் பூசும் முன் தின்னர் கொண்டு பழைய பாலிஷை அகற்றவும். பிளேடு போன்ற கருவிகளை உபயோகிக்கக்கூடாது.

நகங்களுக்கு முதல் எதிரியே தண்ணீர்தான். அதிக நேரம் நகங்கள் தண்ணீரில் நனையும் போது, நகத்தில் இருக்கும் இயற்கையான எண்ணெய்ப் பசை தீர்ந்து விடுகிறது. இதனால் நகங்கள் வறண்டு உலர்ந்து போய்விடும்.

இந்த ‘டீஹைட்ரேடிஸ்’ தாக்குதலைத் தவிர்க்க நகங்களில் பூசப்படும்கோல்ட் க்ரீமையோ அல்லது சரும எண்ணையையோ தடவலாம். இதன் மூலம் நகத்தின் எண்ணெய்ப் பசை பாதுகாக்கப்படும்.

வாரம் ஒரு முறையாவது நகங்களைச் சுத்தமாக்கி, ஒப்பனை செய்து அழகாக வைத்துக் கொள்ள வேண்டும்.

இரவில் தூங்கப் போகும் முன் மேல் தோலுக்கான உள்ள “க்யூடிக்கல்ஸ் மாய்ச்சரைஸரை” அவசியம் தடவ வேண்டும். இது நகங்களை மென்மையாக வைத்துக் கொள்ள உதவும். மூன்று மாதத்திற்கு ஒரு முறை தான் செயற்கை நகங்களைப் பயன்படுத்த வேண்டும். அப்போது கூட வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை நகங்கள் இயற்கையாக திறந்து இருக்கும்படி பார்த்துக் கொள்ளவும்.

நகங்கள் ஆரோக்கியமாகவும், வலிமையாகவும் இருக்க உணவில் கால்சியம் மற்றும் புரதச்சத்துக்களை அதிகமாகச் சேர்த்துக் கொள்ளவும்.

நகங்களை வெட்ட கத்தரிக்கோலைப் பயன்படுத்தக் கூடாது. ஏனெனில் கத்தரிக்கோலால் வெட்டும்போது நகங்களின் வடிவம் மாறிவிடும், எனவே நகத்திற்கு சரியான வடிவம் கொடுக்க “நைல் ஃபைலரை” பயன்படுத்தவும். நகத்தில் பிளவு இருந்தால் நகப்பூச்சுத் தடவி அதை மறைக்கலாம்.

நகம் உறுதியாக இருக்க நகத்தைச் சுற்றியுள்ளப் பகுதிகளில் ரத்த ஓட்டம் சீராக இருக்க வேண்டும். இதற்கு பியானோ வாசித்தல், மேஜை மீது விரல்களால் தாளமிடுதல் போன்ற பயிற்சிகள் நல்லது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here