அந்த 7 மாவட்டங்களுக்கு வாய்ப்பு இல்லை..ஜூன் 17 வரை நீட்டிப்பு?..முதல்அமைச்சர் இடம் மருத்துவ குழு பரிந்துரை…

0

தமிழகத்தில் மேலும் ஒரு வார காலம் முழுஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலினிடம் மருத்துவ குழுவினர் பரிந்துரை செய்துள்ளனர்.

கொரோனா தாக்கம் அதிகரித்து வந்த நிலையில் தமிழகத்தில் மெல்ல மெல்ல கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. முன்னதாக வரும் ஜூன் 7ஆம் தேதி வரை தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா முழு ஊரடங்கு முடிய இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில், ஊரடங்கு நீட்டிக்கப்படுமா அல்லது தளர்வுகள் இருக்குமா என்பது குறித்து தமிழக அரசு இன்று ஆலோசனையில் நடத்தியது.

சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலினுடன் மருத்துவ வல்லுநர்கள் கலந்து கொண்டு ஆலோசித்தனர்.

அப்போது, தமிழகத்தில் முழுஊரடங்கை மேலும் ஒருவாரத்திற்கு நீட்டிக்க மருத்துவ வல்லுநர்கள் குழு பரிந்துரை செய்துள்ளது. பாதிப்பு குறைந்த மாவட்டங்களில் ஜுன் 14 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கும், பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் தற்போது அமலில் உள்ள தளர்வுகளற்ற முழு ஊரடங்கை அமல்படுத்தவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

அதாவது, சென்னை, கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம், நீலகிரி மற்றும் தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களில் தளர்வுகளில்லா ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்று தெரிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here